உலகக்கோப்பையில் நான்காவது இடத்தில் களமிறங்க விஜய் ஷங்கர் தான் சரியானவர்:பிரபல கிரிக்கெட் வீரர் அதிரடி கருத்து.

உலகக்கோப்பை தொடங்குவதற்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் இன்னும் இந்திய அணியில் உலகக்கோப்பையில் யாரெல்லாம் இடம் பெறுவார்கள் என்ற குழப்ப நிலை நிலவி வருகிறது. குறிப்பாக நான்காவது வீரராக யாரை களமிறக்கலாம் என்ற குழப்பம் அனைவரிடமும் உள்ளது.


இந்த நிலையின் விஜய் ஷங்கரை நான்காவது இடத்தில் களமிறக்கலாம் என்று பிரபல கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் கூறியுள்ளார். கடந்த தொடர்களில் நான்காவது இடத்தில களமிறங்கி சிறப்பாக விளையாடிய அம்பதி ராயுடு அந்த இடத்திற்கு சிறந்த தேர்வாக இருக்கும் என்று அனைவரும் எண்ணினர். அனால் அந்த எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அம்பதி ராயுடு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் மூன்று போட்டிகளில் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

இதனால் நான்காம் போட்டியில் அவருக்கு பதிலாக லோகேஷ் ராகுலை இந்திய அணி களமிறக்கியது. இந்திய அணியில் நான்காம் இடத்திற்கு அம்பதி ராயுடு, லோகேஷ் ராகுல், ரிஷாப் பாண்ட் போன்ற வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

மேலும் இந்த பட்டியலில் தினேஷ் கார்த்திக்கும் இனைய வாய்ப்புள்ளது. ஏனெனில் மற்ற வீரர்களை ஒப்பிட்டு பார்க்கும்போது இவர் சீனியர். மேலும் இவர் விக்கெட் கீப்பிங்கிலும் ரிஷாப் பாண்டை விட சிறப்பாக செயல்படுவார்.

இதற்கிடையே விஜய் ஷங்கர் பேட்டிங் பவுலிங் என்ற இரண்டிலும் கிடைக்கின்ற வாய்ப்பை சரியாய் பயன்படுத்திவருகிறார். மேலும் சிங்கிள்ஸ் எடுத்து ஆடுவதில் இவர் மற்ற வீரர்களை விட சிறப்பாக செயல்படுகிறார். இதனால் இவர் தான் உலகக்கோப்பையில் நான்காவது வீரராக களமிறங்கவேண்டும் என்று சஞ்சய் மஞ்சரேக்கர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.