இந்தியா உலகக்கோப்பை கிரிக்கெட் அணியில் இருந்து தமிழக வீரர் விஜய் சங்கர் காயம் காரணமாக விலகியுள்ளார்.
உலகக்கோப்பை! விஜய் ஷங்கர் வெளியே! மயங்க் அகர்வால் உள்ளே! ஏன் தெரியுமா?

முன்னதாக வலைப்பயிற்சியில் பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது பும்ரா வீசிய பந்தில் அவரது காலில் காயம் ஏற்பட்டது . பரிசோதனைக்கு பிறகு அவர் காலில் முறிவு ஏற்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளதால் அவர் 3 வார காலத்திற்கு அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர் . இதனால் உலகக் கோப்பை கிரிக்கெட் அணியில் இருந்து விஜய் சங்கர் காயம் காரணமாக விலகியுள்ளார் .
இதனால் விஜய் சங்கருக்கு மாற்று வீராராக மாயங் அகர்வால் இந்திய உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார் . இவர் விரைவில் இந்திய அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது . ஏற்கனவே இந்திய அணியில் நான்காவது இடத்திற்கு ரிஷாப் பாண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது . இந்நிலையில் விஜய் சங்கருக்கு பதிலாக அணியில் சேர உள்ள மாயங் அகர்வால் நான்காவது இடத்தில் களமிறக்கப்படுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் .