வர்லாம் வர்லாம் வா..! விஜய்க்கு வில்லனாகும் விஜய்சேதுபதி! தளபதி 64 தெறி அப்டேட்!

விஜய் நடிக்கும் புதிய படத்தில் வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது .


நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் பிகில் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்ட நிலையில் இந்த திரைப்படமானது வருகிற தீபாவளி அன்று திரைக்கு வர காத்திருக்கிறது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய் நடிக்கும் புதிய படத்திற்கு நடிகர் விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்க வேண்டுமென்று விஜய்சேதுபதியை அணுகியதாகவும் , நடிகர் விஜய்சேதுபதிக்கும் படத்தின் கதை பிடித்து விட்டதால் , தனது கால்ஷீட்டை மாற்றி அமைத்து இந்த படத்தில் நடிக்க முயல்வதாக விஜய் சேதுபதி கூறி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

ஆனால் நடிகர் விஜய் சேதுபதியின் கால்ஷீட் பொறுத்தே அவர் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறாரா இல்லையா என்று உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது .ஏற்கனவே நடிகர் விஜய்சேதுபதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.