செம தில் விஜய்சேதுபதி! போலீஸ் கமிசனர் முன்பே போலீசாரை தெறிக்க விட்டு அசத்தல்!

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போலிஸ் கமிஷ்னர் முன்னிலையிலேயே மக்களிடம் போலீசாரின் அணுகு முறை சரியாக இல்லை என்று கூறி விஜய்சேதுபதி அதிர வைத்தார்.


சென்னையில் வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாயமாகும் செல்போன்களை உடனுக்கு உடன் கண்டூபிடிக்கவும், திருட்டு செல்போன்களை யாரும் வாங்காமல் தடுக்கவும் ஒரு புதிய செல்போன் ஆப் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

 

இந்த நிகழ்ச்சிக்கு விஜய்சேதுபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் செல்போன் அப்ளிகேசனை வெளியிட, நடிகர் விஜய் சேதுபதி அதனை பெற்றுக் கொண்டார்.

 

விழாவில் பேசிய விஜய்சேதுபதி மிகவும் துணிச்சலான கருத்துகளை எடுத்து வைத்தார். செல்போன் தொலைந்து போனால் உடனடியாக கண்டுபிடிக்க ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதை வரவேற்பதாக விஜய் சேதுபதி கூறினார். தமிழக போலீசாரின் இந்த முயற்சி இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

 

இதன் பின்னர் தான் விஜய்சேதுபதி போலீசாருக்கே அதிர்ச்சி கொடுக்கும் வகையில் பேசினார். மேடையில் சென்னை மாநகர போலீஸ் கமிஷ்னர் இருக்கிறார் என்பதை பொருட்படுத்தாமல் பட்டாசாக வெடித்தார் விஜய்சேதுபதி.

 

மக்களிடம் போலீசாரின் அணுகுமுறை சரியில்லை. எப்போதுமே மக்கள் போலீசை விரோதியாகவே பார்க்கிறார்கள். இதற்கு காரணம் போலீசார் மக்களிடம் நடந்து கொள்ளும் முறை தான். மக்களிடம் போலீசார் தங்கள் அணுகுமுறையை மாற்ற வேண்டும். 

இப்படி மிகவும் வெளிப்படையாக விஜய் சேதுபதி போலீசார் குறித்து பேசிவிட்டு சென்றார். மக்கள் என்ன நினைக்கிறார்களோ அதனை சிறிதும் தயக்கம் இன்றி போலீஸ் கமிஷ்னர் முன்பே கூறிய விஜய்சேதுபதிக்கு பாராட்டுகள் குவிகின்றன.