தீபாவளிக்கு விஜய் Vs விஜய் சேதுபதி! பிகிலுக்கு பீதி கிளப்பும் சங்கத் தமிழன்!

இளைய தளபதி விஜய் நடிக்கும் பீகிள் படத்துக்கு போட்டியாக , நடிகர் விஜய் சேதுபதி நடித்து வரும் சங்கத் தமிழன் படம் திரைக்கு வர உள்ளதாக என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.


இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் "பீகிள்" படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார் . இந்த படம் வருகிற தீபாவளி அன்று திரைக்கு வரும் என்று தகவல்கள்  வெளியாகியிருந்தன . இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி நடித்து வரும் சங்கத் தமிழன் திரைப்படமும் தீபாவளி அன்று ரிலீஸ் செய்ய  அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான விஜயா புரொடக்சன் திட்டமிட்டு இருப்பதாகவும்  தகவல்கள் வெளியாகியுள்ளன .

இப்படத்தை வாலு  மற்றும் ஸ்கெட்ச் படங்களை இயக்கிய இயக்குனர் விஜய் சந்தர் இயக்குகிறார் . இந்த படத்தில் விஜய் சேதுபதி முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் இந்த படத்தில் நிவேதா பெத்துராஜ், நாசர் மற்றும் சூரி ஆகியோர் முக்கிய  வேடங்களில் நடித்துள்ளனர் .

இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளிவந்தால் இரண்டு தயாரிப்பாளர்களுக்கும் வசூல் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும் இரண்டு படங்களின் ரிலீஸ் தேதி பற்றி அதிகார பூர்வு அறிவிப்பு வரும் வரை.