சம்மனுக்கு விஜய் ஏன் ஆஜராகவில்லை..? எதிர்ப்பு காட்டுகிறாரா விஜய்?

விஜய் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை ஆய்வுகளை அடுத்து, அதுகுறித்து விசாரணை நடத்தவேண்டும் என்று வருமான வரித்துறை சம்மன் அனுப்பியிருந்தது. அதன்படி, இன்று நடிகர் விஜய் ஆஜராகி இருக்க வேண்டும்.


ஆனால், இன்று விஜய் அந்த அழைப்புக்கு ஆஜர் ஆகவில்லை. ஆம், அவர் தொடர்ந்து மாஸ்டர் சூட்டிங்கில் இருக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. விஜய் சார்பில் விரைவில் வழக்கறிஞர் ஆஜராகி விலக்கு கேட்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடத்த பிப்ரவரி 10, 11 அல்லது 12 ஆகிய தேதிகளில் ஆஜராக வேண்டும் என்று வருமான வரித் துறையினர் ஏ.ஜி.எஸ். நிறுவனம், அன்பு மற்றும் விஜய் ஆகிய மூன்று தரப்புக்கும் சம்மன் அனுப்பியிருக்கின்றனர்.

 விஜய்யின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் படத்துக்காக வாங்கிய சம்பளம், அதற்குச் செலுத்திய வருமான வரி மற்றும் அதன் மூலம் வாங்கிய சொத்துகள் ஆகியவை குறித்த ஆவணங்கள் கிடைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில்தான் நேற்று தன்னுடைய ரசிகர்களை பார்ப்பதற்காக வேன் மீது ஏறி நின்று கையசைத்து பெரும் பரபரப்பைக் கொடுத்தார். விஜய் வந்து விளக்கம் அளிக்கவில்லை என்றால், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருமான வரித்துறையினர் சொல்கின்றனராம்.

என்ன செய்யப் போகிறார் நம்ம இளையதளபதி?