2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகர்! மிக முக்கிய விருதுக்கு நாமினேட் செய்யப்பட்ட விஜய் ! கொண்டாடும் ரசிகர்கள்!

தமிழ் சினிமா திரையுலகில் நடிகர் விஜய் மிகப்பெரிய உச்சத்தை அடைந்து உள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே .


இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் பிகில் திரைப்படம் வருகிற தீபாவளி அன்று வெளியாக உள்ளது . கடந்த ஆண்டு கடைசியாக இவர் நடித்து வெளிவந்த சர்க்கார் திரைப்படம் நடிகர் விஜய்யை திரையுலகின் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது .

நடிகர் விஜய்க்கு கடந்த ஆண்டு இறுதியில் IARA விருது வழங்கப்பட்டது . அதை தொடர்ந்து இந்த ஆண்டும் நடிகர் விஜய்  சைமா 2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான விருதுக்கு நாமினேட் செய்யப்பட்டுள்ளார் .

சர்க்கார் திரைப்படத்தில் நடிகர் விஜய் சிறப்பான நடிப்பை  வெளிப்படுத்தியதால் தான்  இந்த விருதுக்கு அவர் நாமினேட் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .