தளபதி விஜயின் 40 பட நடிகைகள்..! அன்றும்.. இன்றும்..! எப்படி இருந்தவங்க இப்படி ஆயிட்டாங்க..! யார், யார் தெரியுமா?

நடிகர் விஜய் நடித்த திரைப்படங்களில் கதாநாயகியாக ஏராளமான நடிகைகள் நடித்து பிரபலமாகி உள்ளனர். பல்வேறு நடிகைகள் நடிகர் விஜயுடன் தங்களது முதல் திரைப்படத்தில் அறிமுகமாகி நடித்துள்ளார்கள். அவருடன் நடித்த நடிகைகள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது பற்றி காணலாம்.


நடிகர் விஜய் கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படமான நாளைய தீர்ப்பு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தனா. இவர் அதன்பிறகு சூரியன் சந்திரன் ,பதவிப் பிரமாணம், மைனர் மாப்பிள்ளை, சாமி, கலாட்டா கணபதி போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இவருக்கு பெரிய வெற்றிப் படங்கள் ஏதும் அமையாததால் தற்போது படவாய்ப்புகள் ஏதும் இன்றி இருக்கிறார்.

நடிகர் விஜயுடன் செந்தூர பாண்டி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை யுவராணி அதன்பிறகு ஏராளமான திரைப்படங்களில் குணச்சித்திரம் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாது சித்தி, கல்யாணம் ,தென்றல், பாசமலர் ,சந்திரகுமாரி போன்ற ஏராளமான சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார். தற்போது நடிகை யுவராணி மின்னலே என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

ரசிகன் என்ற திரைப்படத்தில் நடிகர் விஜயுடன் கதாநாயகியாக நடித்த நடிகை சங்கவி அதன் பிறகு விஷ்ணு ,நாட்டாமை, கோயம்புத்தூர் மாப்பிள்ளை ,பொற்காலம் போன்ற ஏராளமான திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு திரையுலகிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தேவா என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை சுவாதி. அதன்பிறகு இவர் வான்மதி, வசந்தவாசல், செல்வா போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார் ‌.அதன் பிறகு இவருக்கு பெரிய பட வாய்ப்புகள் அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் விஜய் கதாநாயகனாக நடித்த ராஜாவின் பார்வையிலே திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை இந்திரஜா நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வந்த இவர் அதன்பிறகு தெலுங்கு மலையாளம் போன்ற திரைப்படங்களில் நடித்து பிஸியாகிவிட்டார். 

சந்திரலேகா என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு கதாநாயகியாக நடித்தவர் நடிகை வனிதா. இவர் அதன்பிறகு ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தார். கடந்த வருடம் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற மிகவும் பிரபலமானார். தற்போது இவர் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார்.

நடிகர் விஜயுடன் பூவேஉனக்காக என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை சங்கீதா. இவர் பொங்கலோ பொங்கல், வள்ளல் ,கும்பகோணம் கோபாலு ,கங்கா கௌரி போன்ற ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2000 ஆண்டு திருமணம் செய்து கொண்டபிறகு திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்துவிட்டார்.

நடிகை சுவலட்சுமி நடிகர் விஜயுடன் லவ் டுடே, நிலாவே வா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் அதன் பிறகும் ஆசை, சுயம்வரம் ,ஏழையின் சிரிப்பில் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் திருமணம் செய்து கொண்டபின் வெளிநாட்டில் சென்று செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு திருமணத்திற்குப் பிறகு பட வாய்ப்புகள் வந்தபோதும் கூட அவர் அதை நிராகரித்துவிட்டு தனது நேரத்தை குடும்பத்தினருடன் செலவழித்து வருகிறார்.

நடிகர் விஜயுடன் கதாநாயகியாக நடித்திருந்த மந்த்ரா , கௌசல்யா, ரீமாசென், மீரா ஜாஸ்மின், ஜெனிலியா போன்றவர்களின் சிலர் பட வாய்ப்புகள் அமையாததாலும், சிலர் திருமணம் செய்து கொண்டதாலும் தற்போது திரைப்படங்களில் பார்க்க முடிவதில்லை.

நடிகர் விஜய்யுடன் கதாநாயகியாக நடித்த நடிகை தேவயானி மற்றும் சிம்ரன் ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தனர். குறிப்பாக நடிகை தேவயானி ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்த பிறகு தற்போது சீரியலில் நடித்து வருகிறார். நடிகை சிம்ரன் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் பேட்ட, சீமராஜா போன்ற திரைப்படங்களில் நடித்து இருந்தார். இவர் தற்போது ஒரு சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜயுடன் கதாநாயகியாக நடித்த நடிகை ஜோதிகா,  சினேகா, பூமிகா, திரிஷா ,ஸ்ரேயா ,நயன்தாரா, அனுஷ்கா, தமன்னா, அமலாபால் ,ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், காஜல் அகர்வால், சமந்தா ,நித்யாமேனன் ,கீர்த்தி சுரேஷ் போன்ற கதாநாயகிகள் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளாக ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகின்றனர்.