உருவாகிறது முதல்வன் 2! விஜய்க்கு கதை சொன்ன இயக்குனர் ஷங்கர்!

இயக்குனர் ஷங்கர் முதல்வன் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளதாகவும் , இந்த படத்திற்கு நடிகர் விஜய் கதாநாயகனாக நடிக்க உள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது .


நடிகர் விஜய் தற்போது இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளியாக உள்ள பிகில்  திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது.

இயக்குனர் ஷங்கர் இந்தியன் 2 திரைப்படத்தை தீவிரமாக இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் உலகநாயகன்  கமல்ஹாசன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1999 ஆம் ஆண்டு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த முதல்வன் திரைப்படம் அரசியலை  மையமாக வைத்து எடுக்கப்பட்டது.

முதலில் இந்தப் படத்தில் நடிகர் விஜய்யை நடிக்க வைக்கலாம் என்று சங்கர் முடிவு செய்திருந்தார் . ஆனால் அப்போது விஜய்  பிஸியாக  மற்ற திரைப்படத்தில் நடித்து இருந்த காரணத்தினால் முதல்வன்  திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்தார் .

ஆனால் தற்போது இயக்குனர் ஷங்கர் விஜய்யை வைத்து முதல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை  இயக்குவது குறித்து  ஒப்பந்தம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஆனால் இந்த திரைப்படத்திற்கான அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.