சென்னை பைபாஸ் ரோட்டில் அதிவேகத்தில் பைக்கில் சென்ற விஜய்! வைரல் வீடியோ உள்ளே!

இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் பிகில் திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் சென்னை அருகே நடந்து வருகின்றது .


இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துவரும் பிகில்  திரைப்படம் வருகிற தீபாவளி தினத்தன்று திரைக்கு வர உள்ளது என்ற தகவல் ஏற்கனவே வெளியாகியது . இந்த படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைத்து பாடிய சிங்க பெண்ணே பாடல்  ரசிகர்களின் வரவேற்பை  பெற்று ஹிட்டாகியுள்ளது .

 இந்நிலையில் இந்த திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் சென்னை செங்குன்றம்  பகுதியில் படமாக்கப்பட்டு வருகிறது . 

அந்த பகுதியில் நடந்த படப்பிடிப்பில்   நடிகர் விஜய் பைபாஸ் ரோட்டில் வேகமாக பைக்கை ஓட்டி செல்வது போல ஒரு காட்சி படமாக்கப்பட்டது . இதனைக் கண்ட ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர் . நடிகர் விஜய் செங்குன்றம் பைபாஸ் ரோட்டில் பைக் ஓட்டி செல்லும் வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது . https://youtu.be/ktppsAzDRTo