10 வருடங்களுக்கு பிறகு விஜய் - நயன்தாரா சூட்டிங் ஸ்பாட்டில் செய்த செயல்!

இளைய தளபதி விஜய் நடிக்கும் 63வது படத்தின் படப்பிடிப்புகள் கடந்த 4 மாதங்களாக நடந்து வருகிறது


இந்த படத்தை இயக்குனர் அட்லீ இயக்குகிறார். மேலும் இந்த படத்தை AGS என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜயுடன் இணைகிறார்.இந்த படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.

சமீபத்தில் இந்த படத்திற்காக விஜய் மற்றும் நயன்தாராவிற்காக ஒரு டூயட் பாடல் ஒன்றை இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான்இசை அமைத்து தந்திருக்கிறார். இந்த டூயட் பாடலுக்கான ஷூட்டிங் கோகுலம் ஸ்டுடியோஸில் சமீபத்தில் நடந்தது. விஜய் மற்றும் நயன்தாரா 10 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் டூயட் பாடலில் ஒன்று சேர்ந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பாக 10 வருடங்களுக்கு முன்பு நடனப்புயல் பிரபுதேவா இயக்கத்தில் வெளிவந்த வில்லு படத்தில் இவர் இருவரும் டூயட் பாடலில் சேர்ந்த நடித்திருந்தனர். 10 வருடத்திற்கு பிறகு விஜய் மற்றும் நயன்தாரா டூயட் பாடலில் மீண்டும் இணைவது ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் ஆக இருக்கும் என்றால் அது மிகையாகாது.