சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ்! ஹிருதிக்கை விட ரித்திக் தான் பெஸ்ட்! விஜய் டிவியை வெளுக்கும் ரசிகர்கள்!

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் ஜுனியர் 6 நிகழ்ச்சியில் ஹிருத்திக் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.


கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய சூப்பர் சிங்கர் ஜூனியர் 6 , வெற்றிகரமாக 53 பகுதிகளை கடந்து நேற்று இறுதி சுற்று சென்னையில் நடைபெற்றது. ஷங்கர் மஹாதேவன், சித்ரா, எஸ்.பி.பி.சரண், கல்பனா ஆகிய நான்கு பேரும் நடுவர்களாக இருந்தனர்.

நேற்று சென்னையில் நடைபெற்ற இறுதிச்சுற்று  நிகழ்ச்சியில் 13 வயது ஹிருத்திக் முதல் இடமும் சூர்யா 2-வது இடமும் பூவையார் 3-வது இடமும் பெற்றார்கள். இதையடுத்து ரூ. 50 லட்சம் மதிப்புள்ள வீடு ஹிருத்திக்குக்கு பரிசாகக் கிடைத்துள்ளது. சூர்யாவுக்கு ரூ. 25 லட்சமும் பூவையாருக்கு ரூ. 10 லட்சமும் பரிசுத்தொகையாக  கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

இறுதிச்சுற்று முடிவடைந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியின் பேஸ்புக் பக்கத்தில் ஹிருத்திக் தான் முதல் இடத்திற்கு தகுதியானவர் எனப் பதிவிட்டுள்ளனர். அந்தப் பதிவுக்குக் கீழ் பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அனைவரும் ரித்திக் வெற்றி பெற்றதை கொண்டாடினாலும் அனுஷ்யாவுக்கு முதல் மூன்று இடங்களில் ஒன்று கூட கிடைக்காதது வருத்தம் அளிப்பதாக பெரும்பாலானோர்  இணையத்தில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.