காதலனை தடலாடியாக மாற்றிய பிக் பாஸ் ஜூலி! ஒரு வருடத்தில் 2வது காதலன்!

தனது பாய் பிரண்ட் என்று ஜூலி புதிய நபரின் புகைப்படத்தை பதிவிட உண்மையில் உன் பாய் ஃபிரெண்ட் யார்? ஜூலியை கலாய்க்கும் நெட்டிசன்கள்


வருடா வருடம் புதுப்புது பாய் ஃபிரெண்டை தேடிப்பிடிப்பதாகக் கூறி, ஜூலியை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். பிக் பாஸ் டிவி நிகழ்ச்சி மூலமாகப் பிரபலமானவர் ஜூலி. இந்த நிகழ்ச்சியின்போது கிடைத்த செல்வாக்கைப் பயன்படுத்தி, படிப்படியாக சினிமா உலகில் முகம் காட்ட தொடங்கிவிட்ட ஜூலி,

புதிய படங்களில் நடிக்கவும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதேசமயம், தனது அன்றாட செயல்பாடுகள் பற்றி, அவ்வப்போது, ஆண் நண்பர்களுடன் இருக்கும் புகைப்படங்களையும் ஜூலி, ட்விட்டர், ஃபேஸ்புக்கில் பதிவிட்டு வருகிறார்.

இதன்படி, கடந்த ஆண்டு வரையிலும் தனது பெஸ்ட்டி என்று கூறி, மார்க் ஹம்ரனுடன் இருக்கும் புகைப்படங்களை ஜூலி பதிவிட்டு வந்தார். மார்க் உடன் இணைந்து, எழில் துரை இயக்கும் புதிய படத்தில் ஜோடியாக நடிக்க இருப்பதாகக் கூறி, கடந்த ஆண்டில் அவர் ட்விட்டரில் பதிவை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், ராஜ்திப்ரன் எனது பெஸ்ட்டி என்றும், அவருடன் ரெஸ்டாரன்ட் உள்ளிட்ட இடங்களில் ஒன்றாக சுற்றுவது மன நிறைவு தருகிறது என்றும் கூறி ட்விட்டரில் வரிசையாக, ஜூலி பதிவிட்டுள்ளார். இதற்கு, ரசிகர்கள் பலரும் கலாய்த்து பதிலடி கொடுத்து வருகின்றனர்.

ஏற்கனவே மார்க் ஹம்ரனுடன் ஒப்பந்தமான படம் என்னவானது எனவும், உண்மையான பெஸ்ட்டி யார் எனவும் அவரை கலாய்த்து வருகின்றனர். இப்படிஅடிக்கடி பெஸ்ட்டியை மாற்றுவது சரிதானா ஜூலி என, அவர்கள் கேள்வியும் எழுப்பியுள்ளனர். பொதுவாக பெண்கள் பெஸ்டி என்று அறிமுகம் செய்யும் ஆண்கள் அவர்களின் அந்தரங்க நண்பர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.