பிகில் சூட்டிங் ஓவர்! அடுத்த படத்திற்கு தேதி குறித்த விஜய்! அல்லு தெறிக்கவிடும் அப்டேட்!

நடிகர் விஜய் கடைசியாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த சர்க்கார் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியானது.


தற்போது  நடிகர் விஜய் , இயக்குனர் அட்லி இயக்கத்தில் பிகில்  என்ற திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். இது நடிகர் விஜய் நடிக்கும் 63 ஆவது திரைப்படமாகும். இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாரா, யோகிபாபு , விவேக், இந்துஜா ,ரெபா, மோனிகா ,வர்ஷா, கதிர் போன்றோரும் நடித்துள்ளனர் 

இந்த திரைப் படத்திற்கான இசை இசைப்புயல் ஏ .ஆர். ரகுமான் அமைத்துள்ளார்.  இந்த திரைப்படமானது வரும் தீபாவளிக்கு வெளியிடப்படும் என திரைப்பட குழு சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த பிகில்  திரைப்படத்தை தொடர்ந்து  நடிகர் விஜய் தன்னுடைய 64வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த  திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் துவங்கும் என படக்குழுவினர் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் இந்தப் திரைப்படத்திற்கான ஒளிப்பதிவு பணியை மேற்கொள்கிறார்.