விரைவில் அம்மாவாகப் போகும் நயன்தாரா..! புகைப்படத்தை வெளியிட்டு விக்னேஷ் சொன்ன சுளீர் தகவல்!

நயன்தாராவின் புகைப்படத்தை வெளியிட்டு தனது வருங்கால குழந்தையின் தாய்க்கு அன்னையர் தின வாழ்த்துக்களை கூறி பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.


அன்னையர் தினத்தை அடுத்து பிரபலங்கள் அனைவரும் தங்களை சமூக வலைதளங்களின் மூலமாக தங்களுடைய தாய்க்கும், மாமியாருக்கும் மனைவிகளுக்கும் தங்களுடைய அன்பார்ந்த அன்னையர் தின வாழ்த்துக்களை கூறிய வண்ணம் உள்ளனர். அந்த வகையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை காதலித்து வரும் விக்னேஷ் சிவன் தன்னுடைய அழகிய வாழ்த்துச் செய்தியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். விக்னேஷ் சிவன் தற்போது வெளியிட்டுள்ள இந்த அன்னையர் தின வாழ்த்துச் செய்தி சமூகவலைதளத்தில் தீயாக பரவி வருகிறது.

இயக்குனர் விக்னேஷ் சிவன் முதலில் தன்னுடைய அம்மாவிற்கு அன்னையர் தின வாழ்த்துக்களை கூறி புதிய பதிவை வெளியிட்டு இருந்தார். அவர் அந்த பதிவில், அன்னையர் தினத்திற்காக நாம் கடவுளை வணங்குவோம். என் வாழ்வில் இருக்கும் தன்னலமற்ற கதாபாத்திரம் நீங்கள்தான். ஐ லவ் யூ மம்மி என்று விக்னேஷ் சிவன் தன்னுடைய பதிவில் தன் தாயாருக்கு அழகிய அன்னையர் தின வாழ்த்துக்களை கூறியிருந்தார். விக்னேஷ் சிவன் தன் தாயாருக்கு அன்னையர் தின வாழ்த்துக்களை கூறியதைப் போலவே தன் காதலியான நயன்தாராவின் தாயாருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்களை கூறி மகிழ்வித்திருக்கிறார். அந்தப் பதிவில், உங்களுக்கு அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் திருமதி குரியன் ... நீங்கள் ஒரு அழகான குழந்தையை வளர்ப்பதில் ஒரு சிறந்த பங்காற்றி இருக்கிறீர்கள். நாங்கள் உங்களை எப்போதும் நேசிக்கிறோம், மிகவும் நன்றி அம்மா நன்றி அம்மு.. என்று நயன்தாராவின் தாய்க்கு அன்னையர் தின வாழ்த்தை கூறி மகிழ்வித்திருக்கிறார்.

இதேபோல் இயக்குனர் விக்னேஷ் சிவன் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவிற்கும் அன்னையர் தின வாழ்த்துக்களை கூறி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தில் நயன்தாரா அழகிய குழந்தை ஒன்றை தன் கையில் ஏந்தி புகைப்படத்திற்கு போஸ் அளித்திருக்கிறார். எனது வருங்கால குழந்தைகளின் தாய்க்கு இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.தற்போது விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள இந்த அன்னையர் தின வாழ்த்துக்கள் பதிவு சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.