கூட்டணி பேரத்துக்காக விஜயகாந்த் பேச வைக்கப்பட்டாரா? பாவம் விட்ருங்க..!

அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவரும் விஜயகாந்த் பேசும் ஒரு வீடியோ வெளிடப்பட்டதற்குப் பின்னே உள்ள மர்மம் வெளிவந்துள்ளது


விஜயகாந்த்தின் தே.மு.தி.க. கட்சிக்கும் எடப்பாடியின் அ.தி.மு.க.வுக்கும் கூட்டணிப் பேச்சு வார்த்தையை ஒரு மூத்த அமைச்சர் முன்னெடுத்துச் செய்து வருகிறார். அப்போது, ’விஜயகாந்த் இந்தத் தேர்தலுக்குள் சிகிச்சை முடிந்து திரும்புவது சந்தேகம் என்கிறார்கள். விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்திற்கு வரவில்லை என்றால் கூட்டணி வைப்பதில் அர்த்தம் இல்லை” என்ற ரீதியில் சொல்லப்பட்டதாம்.

கண்டிப்பாக அடுத்த மாதம் சிகிச்சை முடிந்து திரும்பிவிடுவார் என்று உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ளதாம். அதனை நிரூபிக்கும் விதமாகத்தான் இன்று விஜயகாந்த் பேசிய வீடியோ வெளியிடப்பட்டதாம். ஒவ்வொரு வார்த்தைக்கும் கட் செய்து விஜயகாந்த் பேசிய வீடியோ ஒரு வகையில் பரிதாபம். ஏனென்றால், உடல் நலம் சரியில்லாத நிலையில் மிகுந்த சிரமத்துடன் பேச வைக்கப்பட்டிருக்கிறார்.

விஜயகாந்த் இந்த சூழலில் பிரசாரத்துக்கு வந்தால் மக்கள் மனதில் நல்ல எண்ணம் வரும், அனுதாப ஓட்டு விழும். அதனால் எங்களுக்கு நாடாளுமன்றத்தில் நான்கு சீட் வேண்டும் என்று தே.மு.தி.க. கேட்டுள்ளதாம். நான்கு சீட் கொடுத்தால், உங்களிடம் நிற்பதற்கே ஆள் இல்லை, கோடிகளில் செலவழிக்க வேண்டும். அதனால் ஏதாவது ஒரு தொகுதி தருகிறோம் என்று ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.

கூட்டணி பேச்சுவார்த்தையை நல்லபடியாக முடிக்கவேண்டும் என்பதற்காகத்தான் விஜயகாந்தை பேச வைத்திருக்கிறார்கள் என்று அவரது கட்சியினரே வேதனைப்படுகிறார்கள். எங்க கேப்டனை இப்படி காட்டவே வேண்டாம், பழைய விஜயகாந்தா காட்டுங்க என்று கெஞ்சுகிறார்கள் கட்சிக்காரர்கள்.