ஐஸ்வர்யா ராய்க்கும் ராதிகாவுக்கும் என்ன லடாய்..? ஆடியோ விழாவில் ஓப்பன் டாக்!

உலக அழகி ஐஸ்வர்யா ராயுடன் நடிகை ராதிகா ஒப்பிட்டு பேசிய சம்பவமானது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோலிவுட் திரையுலகில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக நடித்து வரும் நடிகைகளுள் நடிகை ராதிகா ஒருவர். இவரை இயக்குனர் சிகரம் பாரதிராஜா தான் கோலிவுட் திரையுலகில் அறிமுகப்படுத்தினார். சமீபத்தில் வானம் கொட்டட்டும் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகை ராதிகா சரத்குமார் கலந்து கொண்டார். இந்த படத்தில் இவர் தன்னுடைய கணவரான நடிகர் சரத்குமாருடன் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆடியோ வெளியீட்டு விழாவில் ராதிகா சரத்குமார் பேசுகையில், "இயக்குநர் மணிரத்தினம் படத்தில் எனக்கு பரதநாட்டியம் கதாபாத்திரம் வழங்கப்பட்டது. அந்த கதாபாத்திரத்தில் நடித்து அவரை அழ வைக்காத நாளே இல்லை. 

அதன்பிறகும் அவர் என்னை பல திரைப்படங்களில் நடிப்பதற்கு அழைத்தார். ஆனால் உலக அழகி ஐஸ்வர்யா ராய் என்னை விட 2 இன்ச் உயரம் கம்மியாக இருந்ததால், அவரை கதாநாயகியாக்கி அழகு பார்த்தனர்" என்று கலகலப்பாக பேசினார்.

பின்னர் மேடையில் அமர்ந்திருந்த இளம் நடிகர்களை பார்த்து "சின்ன புள்ளைங்க" என்றும் பேசினார். அப்போது சரத்குமார் " அதா வயசாயிடுச்சில்ல, நீ தாராளமா அப்படி சொல்லலாம்" என்று கமென்ட் அடித்தார்.

தம்பதியினரின் கலகலப்பான பேச்சை கேட்ட மேடையில் அமர்ந்திருந்த கதாநாயகன் விக்ரம் பிரபு, சாந்தனு பாக்யராஜ் ஆகியோர் சிரித்து மகிழ்ந்தனர். இந்த சம்பவமானது கோலிவுட் திரையுலகில் வைரலாகி வருகிறது.