கொரோனா ஊரடங்கிற்கு மத்தியில் நடிகர் ஜெயராமின் மகளுக்கு திடீர் திருமணம்? வெளியான புகைப்படத்தின் உண்மை பின்னணி!

பிரபல நடிகரின் மகளுக்கு திருமணம் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் கடந்த 20 வருடங்களுக்கும் அதிகமாக தன்னுடைய பன்முகத்திறமையை பறைசாற்றி வருபவர் நடிகர் ஜெயராம். தெனாலி, பஞ்சதந்திரம், துப்பாக்கி ஆகிய பல தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் இவர் நடித்தது குறிப்பிடத்தக்கது. 20 வருடங்களுக்கு முன்னர் சில தமிழ் திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வந்தார். தற்போது மணிரத்னம் அவர்கள் இயக்கிவரும் பிரம்மாண்ட திரைப்படமான "பொன்னியின் செல்வன்"-ல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார.

இவருக்கு காளிதாஸ் ஜெயராமன் என்ற மகனும், மாளவிகா ஜெயராமன் என்ற மகளும் உள்ளனர். காளிதாஸ் ஜெயராமன் தமிழ் திரையுலகில், "மீன் குழம்பும் மண் பானையும்" என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். 

இதனிடையே கடந்த சில நாட்களாக மாளவிகா ஜெயராமன் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் ஹலோ கோலத்தில் நிறைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த புகைப்படங்களுக்கு  கீழேயே அவர், விளம்பரத்திற்கான போட்டோஷூட் என்றும் பதிவிட்டிருந்தார்.

இருப்பினும் வேலை வெட்டி இல்லாத நெட்டிசன்கள் பலர், அவருக்கு திருமணம் நடைபெற்று விட்டதாக சமூக வலைத்தளங்களில் பல வதந்திகளை பரப்பி வந்த வண்ணமிருந்தனர். 

இந்த வதந்தியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.