கேஸ் சிலிண்டர் அடியில் மறைந்திருந்த கொடிய விஷப்பாம்பு..! குடும்பத் தலைவிகளை பதற வைக்கும் சம்பவம்!

குடோன்களில் இருந்து நேரடியாக வீடுகளுக்கு டெலிவரி செய்யப்படும் கேஸ் சிலிண்டரில் பாம்பு ஒன்று பதுங்கியிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சமையல் எரிவாயு சிலிண்டர் என்பது மக்களின் அத்தியாவசியத் தேவையாகும். இந்த சிலிண்டர்கள் பொதுவாகவே காலி மனைகளில் குடோன்கள் அமைக்கப்பட்டு அங்கு பாதுகாப்பாக வைக்கப்படுகின்றது. அவ்வாறு அங்கு நூற்றுக்கணக்கில் சிலிண்டர்களை அடுக்கி வைக்கும் பொழுது திறந்த வெளியில் இருந்து பாம்பு, உள்ளிட்ட விஷ உயிரினங்கள் சிலிண்டரில் பதுங்கிக் கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளது.

அந்த வகையில்தான் தற்போது ஒரு சிலிண்டரில் பாம்பு ஒன்று பதுங்கி இருந்திருக்கிறது. அப்படியாக பாம்பு ஒன்று சிலிண்டரின் அடிபாகத்தில் பதுங்கியிருந்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி நுகர்வோரின் நெஞ்சங்களை பதைபதைக்க வைத்துள்ளது. ஆம் இந்த புகைப்படத்தில் ஒரு கொடிய ரக விஷ பாம்பு ஒன்று சிலிண்டரின் அடிப்பாகத்தில் இருக்கும் இடத்தில் சுருண்டு படுத்துக் கொண்டு இருக்கிறது. இதனை நெட்டிசன் ஒருவர் புகைப்படமாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் அனைவரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். ஆனால் இதில் அச்சப்படுவதை விட்டு விட்டு முன் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும். மாறாக சிலிண்டர்களை குடோன்களில் அடுக்கி வைக்கும் பொழுது அதனை சற்று கூடுதல் கவனம் கொண்டு பாதுகாக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் குடோன்களில் இருந்து வீடுகளுக்கு நேரடியாக இறக்குமதி செய்யப்படும் சிலிண்டர்களை பெண்கள் வீட்டில் வாங்கும் பொழுது அதனை மிகுந்த கவனத்துடன் சரி பார்த்துக்கொள்ள வேண்டும். சரி பார்த்த பின்பு அதனை வீட்டிற்குள் வைப்பது நல்லது. இத்தகைய வழி முறைகளை முறையாக கடை பிடித்தோமானால் நம்மால் இம்மாதிரியான சூழ்நிலைகளை எளிதாக கையாள இயலும். தற்போது சிலிண்டருக்குள் பாம்பு பதுங்கி இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.