காண்போரை அதிர வைக்கும் பிரமாண்ட சைஸ் கொசு..! நேரில் பார்த்து அதிர்ந்த தாய் - மகன் செய்த செயல்!என்ன தெரியுமா?

அர்ஜென்டினாவைச் சேர்ந்த எசுவேல் லோபோ என்ற டுவிட்டர் பயனாளி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மிகப்பிரம்மாண்டமான ராட்சச கொசுவை புகைப்படமெடுத்து வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படமானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தது.


எசுவேல் லோபோ என்பவர் அர்ஜென்டினாவை சேர்ந்தவராவார். இவர் அந்த பகுதியில் வசித்து வருபவர். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புதிய பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த பதிவில் மிகப்பிரம்மாண்டமான ராட்சச கொசு வின் புகைப்படத்தை இணைத்து வெளியிட்டு இருந்தார்.

அவர் வெளியிட்டிருந்த இந்த புகைப்படத்தை பார்த்த சமூக வலைதள வாசிகள் அதிர்ந்து போயினர். ஏனெனில் சாதாரணமாக இருக்கும் அளவை விட அந்த கொசு பார்ப்பதற்கு மிகவும் ராட்சஸ தானமாக காணப்பட்டது. அதிபயங்கரமான அளவில் இருக்கும் அந்த கொசு அவரது வீட்டின் ஜன்னல் வழியாக உள்ளே வந்ததாக எசுவேல் கூறியிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் அந்த ராட்சச கொசுவின் அளவை சரியாக ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக அவர் ராட்சஸ கொசுவின் புகைப்படத்துடன் சாதாரண அளவில் இருக்கும் கொசுவின் புகைப்படத்தையும் சேர்த்து வெளியிட்டிருக்கிறார். இதனை பார்க்கும் போது அந்த ராட்சச அளவு கொசு சாதாரண அளவை விட மிகவும் பெரியதாக உள்ளதை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.

அதாவது எசுவேல் வெளியிட்டிருந்த அந்த பதிவில், என் ஜன்னல் வழியாக வந்த கொசுவின் அளவைப் பாருங்கள் . முதலில் என் அம்மாதான் அதனை பார்த்தார் . அவர் பயந்து போனார். பின்னர் கொசு மருந்தை அதன் மீது தெளித்தார். நான் இதனை பார்த்துவிட்டு இது போன்று வேறு எங்கேயாவது இருக்கிறதா என்பதை இணையதளத்தில் தேடினேன். ஆனால் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த கொசு செர்னோபிலின் புதிய பரிணாம வளர்ச்சி பெற்றதாக தெரிகிறது என்று அந்த பதிவில் எசுவேல் கூறியிருக்கிறார். இந்த புகைப்படம் வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான லைக்குகளையும் கமெண்ட் களையும் பெற்று வருகிறது.