நெற்கதிர் உடன் வயலில் இறங்கிய தமிழக முதலமைச்சர்! பாராட்டிய குடியரசுத் துணைத் தலைவர்! வைரல் போட்டோ!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் வயலில் இருப்பதுபோன்ற புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.


தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன் சொந்த ஊரான சேலம் மாவட்டத்திலுள்ள எடப்பாடி அருகே உள்ள கிராமத்தில் தனது குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். அப்போது அவர் வயலில் வேலை செய்வது போலவும் மற்றும் நெற்கதிரை கையில் வைத்து இருப்பது போலவும் புகைப்படங்கள் வெளியாகின. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வித்யாசமான இந்த புகைபடங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.

இந்நிலையில் இந்திய குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வயலில் உள்ளது போன்ற புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து அதோடு அவருடைய கருத்துக்களையும் பதிவிட்டுள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தான் ஒரு விவசாயி என்பதை மறக்கவில்லை. முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் வயலில் இறங்கி வேலை செய்வது போன்ற புகைப்படம் நிச்சயம் மக்களை ஈர்க்கும் எனவும் வெங்கைய நாயுடு கூறியுள்ளார்.

மேலும் விவசாயத்தை லாபகரமாகவும் மற்றும் நீடித்து நிலைத்திருக்கக்கூடிய தொழிலாகவும் மாற்றுவது ஒவ்வொருவரின் கடமை எனவும் குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.