நோய் எதிர்ப்பு சக்தி தருதே வெந்தயக்கீரை !!

வெந்தயக்கீரை என்பது முளைத்து வளர்ந்துள்ள சுமார் 3 அங்குலம் உயரமுள்ள வெந்தயத்தையே குறிக்கும்.. வெந்தயக்கீரை உடலுக்கு குளிர்ச்சியூட்டும் தன்மை வாய்ந்தது.


·         ஜீரண குறைபாடு இருப்பவர்களுக்கு  சிறுநீர்ப் பெருக்கியாகவும், மலமிளக்கியாகவும் வெந்தயக்கீரை பயன்படுகிறது.

·         ஜீரண சக்தியைத் தூண்டக்கூடிய தன்மை வெந்தயக்கீரையில் இருப்பதால், வயிற்றுப் பொருமல், வாய்வு பிரச்னைகளை சரிசெய்து, பசியை அதிகரிக்கிறது.

வெந்தயக் கீரையில் சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, தாமிரச்சத்து போன்றவை நிரம்பியிருப்பதால் உடலுக்கு ஆரோக்கியம் தருவதாகவும் நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கவும் கைகொடுக்கிறது