வேல்முருகனை பாடாய் படுத்தும் ஸ்பான்டிலிஸிஸால் நோய்! கேரளாவில் சிகிச்சைக்கு அனுமதி!

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரான வேல்முருகன் அவர்கள் கேரளாவில் சிகிச்சை மேற்கொண்டு வருவது அக்கட்சியினரிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


அண்மை காலமாக தமிழகத்தின் அரசியல்வாதிகள் உடல் நலிவுற்று வருகின்றனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் மேல் சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலானோர் கேரள நாட்டில் உள்ள வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக செல்கின்றனர்.

இவர்களை பின்பற்றும் வகையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரான வேல்முருகன் உடல்நலக்குறைவால் கேரள மாநிலத்தில் முகாமிட்டுள்ளார். வேல்முருகனுக்கு கடந்த சில மாதங்களாகவே அவ்வப்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்துள்ளன. இது குறித்து அவருக்கு நெருக்கமான தொடர்புகளை அணுகியபோது அவர் முதுகுவலியால் அவதிப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. மேலும் அவருக்கு வயிறு சம்பந்தமான நோய்களும் அடிக்கடி ஏற்படுவதுண்டு.

முதுகெலும்பு குருத்து நோயான ஸ்பான்டிலிஸிஸால் அவர் அதிகளவில் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அவரால் முன்பு போன்று கட்சிப் பணிகளில் ஈடுபட இயலவில்லை. இதற்கு சிகிச்சை பெறுவதற்காகவே கேரளா மாநிலத்திற்கு சிகிச்சை பெற சென்றுள்ளார். இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் அவர் கட்சிப் பணியில் முன்புபோல் ஈடுபடுவார் என்று தொண்டர்கள் நம்பிக்கை அடைந்துள்ளனர்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் விரைந்து பூரண நலம் அடைய பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணமுள்ளனர்.