சம்பளக் குறைப்பை தொடங்கிவைக்கிறது வேலம்மாள் கல்வி நிறுவனம். கையில் இருக்கும் காசை எல்லாம் வீணாக்காதீங்க மக்களே…

கரண்ட் பில் கட்ட வேண்டாம், வாடகை தரவேண்டாம், இ.எம்.ஐ. கட்ட வேண்டாம் என்று சொல்லப்படுவதை எண்ணி, ஆனந்தமாக இருக்கும் மக்களுக்கு ஆப்படிக்கும் வேலையில், தொடங்கிவைத்துள்ளது புகப்பெற்ற கல்வி நிறுவனம்.


ஆம், வேலம்மாள் கல்வி நிறுவனம்தான் சம்பளக் குறைப்பை இந்த மாதமே தொடங்கிவைக்கிறது. ஆசிரியர்களுக்கு 50 சதவீத ஊதியம் மட்டுமே தரமுடியும் என்று தெளிவாக கூறியிருக்கிறது. நிலைமை சீரடைந்த பிறகு மொத்தமாக அல்லது கொஞ்சம் கொஞ்சமாக சம்பளப் பிடித்தம் கொடுக்கப்படும் என்றும் சொல்கிறது இந்த நிறுவனம். 

மாணவர்களிடம் கல்வித் தொகையை முழுமையாகத்தானே பெற்றுக்கொண்டது, அப்படியிருக்க ஆசிரியர்களின் சம்பளத்தை மட்டும் சட்டென குறைப்பதில் என்ன அர்த்தம் என்று கேட்கமுடியாமல் தவிக்கிறார்கள் ஆசிரிய மக்கள்.

இன்று நாட்டில் உள்ள பெரும்பாலான நடுத்தர மக்கள், இந்த மாத சம்பளம் முழுமையாக வந்துவிடும் என்று நம்பியிருக்கும் நேரத்தில், இப்படியொரு இடியாப்பச் சிக்கலை ஆரம்பித்திருக்கிறது வேலம்மாள் நிறுவனம். இன்னமும் எந்தெந்த நிறுவனங்கள் எப்படியெல்லாம் குண்டு போடப்போகிறதோ, உஷார்… மக்களே உஷார்.