மனிதர்களுடன் வாகனங்களை விழுங்கும் விபரீத பாலம்! வைரல் வீடியோவால் ஏற்பட்ட பரபரப்பு!

உலகின் பல்வேறு இடங்களில் பாலத்தின் மேல் செல்லும் வாகனங்கள் திடீரென மறையும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.


உலகின் பல்வேறு இடங்களில் உள்ள பாலங்களில் இடது பக்கத்தில் செல்லும் வாகனங்கள் மறையும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி நெட்டிசன்களை குழப்பம் அடைய செய்கின்றன‌.

இதற்கு பல்வேறு அறிவியல் வல்லுனர்கள் விளக்கமளித்துள்ளனர். அதாவது, "ஆப்டிகல் இல்யூஷன்" எனப்படும் அறிவியல் விதியினால் நம் கண்களுக்கு அவை மறைவது போல தெரிகின்றன. இந்த தொழில்நுட்பத்திற்கு உலகம் முழுவதும் வரவேற்பு கிடைத்துள்ளது.  இதனை பார்க்கும் நெட்டிசன்கள் என்ன நடக்கின்றது என்பது புரியாமல் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். 

சமீபத்தில் இந்த மாயையை பயன்படுத்தி நதியின் மேல் இடப் பக்கத்தில் செல்லும் வாகனங்கள் வரைவது போன்ற வீடியோயொன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது‌. இதுவரை 63,000 இந்த வீடியோவை கண்டுகளித்துள்ளனர். விடை தெரியாமல் குழம்பும் நெட்டிசன்கள் விடைக்காக சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். https://www.youtube.com/watch?v=X9HqlQkzKHU