கோயில் பிரகாரத்தில் தோண்ட தோண்ட சாம்பல் வரும் அதிசய கோயில் எங்குள்ளது தெரியுமா?

கொருக்கை வீரட்டேஸ்வரர் கோயில் பல்வேறு சிறப்பம்சங்கள் நிறைந்தது. காமனை தகனம் செய்தது, தீர்த்தவாகு முனிவர் என்ற முனிவர் இறைவனுக்கு திருமுழுக்காட்ட கங்கையை கொண்டு வந்த சிறப்பு பெற்ற தலம்.


நாகப்பட்டினத்தில் உள்ள கொறுக்கையில் உள்ள அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில் சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 26 வது தேவாரத்தலம் ஆகும். ஹோலிப் பண்டிகை வட மாநிலங்களில் மிக கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். தற்போது தமிழகத்திலும் ஹோலிப் பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. ஹோலி பல்வேறு காரணங்களுக்காக கொண்டாடப்படுகின்றது. அதன் பின்னணியில் பல்வேறு புராண கதைகள் உள்ளன. பிரகலாதன் ஹோலிகா கதை, கிருஷ்ணர் தான் கருமையாக இருப்பதாக நினைத்த கதை, சிவன் - பார்வதி காதல் கதை என உண்டு. அதையும் தாண்டி ஒரு புராண நிகழ்வு நடந்துள்ளது.

 இக்கோயிலைச் சுற்றியுள்ள பகுதியில் மணலுக்குப் பதில் தோண்ட, தோண்ட சாம்பல் கிடைக்கும் அதிசயம் என பல பிரமிப்புகளை ஏற்படுத்துகின்றது அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில் பல்வேறு சிறப்பம்சங்கள் நிறைந்துள்ளன. அதில் ஹோலிப் பண்டிகை உருவாக காரணமாக இருந்த காம தகனம் நடந்த இடமாக பார்க்கப்படுகின்றது.

சிவ பெருமான் ஒரு முறை ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டு மோம நிலைக்கு சென்றிருந்தார். அவரது தியானத்தால் உலகம் வெப்பமாகி தகித்தது. இதை உணர்ந்த தேவர்கள், முருகப் பெருமானிடம் முறையிட்டனர். ஆனால் முருகனோ தந்தையின் தவத்தை கலைக்க என்னால் முடியாது, என சொல்ல, மன்மதனிடம் சென்று சிவனின் தவத்தை கலைக்க கோரினர். அவரும் முடியாது என சொன்னாலும், அனைவரின் வேண்டுகோளால் சரி என ஒப்புக் கொண்டு ஈசனின் தவத்தை கலைக்க சென்றார்.

தன் மன்மத அம்பாளைச் சிவனின் மீது தொடுக்க அவர் தவம் கலைந்து பார்த்தார். இந்த செயலை செயதது மன்மதன் என்பதை அறிந்து அவனை தன் நெற்றிக் கண்ணால் எரித்து சாம்பலாக்கினார். தன் கணவன் எரிக்கப்பட்டதை அறிந்த மன்மதனின் மனைவி ரதி தேவி, இறைவனிடம் சரணடைந்து அவரை மீண்டும் உயிர்ப்பித்துத் தர வேண்டும் என மன்றாடினார். அவரின் வேண்டுதலுக்கிணங்க மன்மதனை உண்டு பண்ணி தேய்பிறையில் தெய்வலோகத்திற்கு அனுப்பி விடுவதாக கூறினார். இருப்பினும் இனி மன்மதனை உன்னால் மட்டும் தான் பார்க்க முடியும் என கூறினார்.

இப்படி புராண சிறப்பு மிக்க இந்த இடத்தில் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் களிமண் நிறைந்திருக்கின்றன. ஆனால் கோயிலில் உள்ள காமன் தகனம் செய்யப்பட்ட ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் சாம்பல் நிறைந்திருக்கின்றது. தோண்ட தோண்ட சாம்பல் மட்டுமே வருகின்றது. மாசி மாத பெளர்ணமி தினத்தில் இந்த காம தகனம் விழா கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது.

இந்த அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில் அஷ்ட பைரவர் கோயில்களில் ஒன்றாகும். இங்குள்ள வீரட்டேஸ்வரரை வணங்கி வந்தால் திருமணம் ஆக தாமதமாகும் நபர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடி வரும். அதே போல் திருமணம் ஆகி குழந்தைப்பேறு இல்லாதவர்கள் வணங்கி வர பிள்ளைப்பேறு கிடைக்கும். வீட்டில் பிரச்சினை, கணவன் - மனைவி பிரியும் நிலையில் இருந்தால் இங்கு வந்து தரிசனம் செய்ய குடும்ப ஒற்றுமை, கணவன் - மனைவி இடையே ஒருவித இணைப்பு, பிணைப்பு உண்டாகும். இப்படி குடும்ப ஒற்றுமையை கொடுக்கக் கூடிய சின்னமாக திருக்கொருக்கை வீரட்டேஸ்வரர் ஆலயம் விளங்குகிறது.