திருமணமாகி நான்கே மாதம்..! அந்த இடத்தில் தீராத வலி..! கணவனை வெளியே அனுப்பிவிட்டு மனைவி எடுத்த பகீர் முடிவு! அதிர்ந்த உறவுகள்!

சேலம் மாவட்டத்தில் பெண் ஒருவர் திருமணமாகி நான்கே மாதங்களில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த இடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சேலம் மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் என்ற பகுதியில் வசித்து வருபவர் தீபக் என்பவராவார். இவர் தன்னுடைய அத்தை மகளான வேதவல்லியை உயிருக்குயிராக காதலித்து வந்தார். தீபக்கும் வேதவல்லியும் ஒருவரை ஒருவர் மனதாரக் காதலித்து வந்ததால் குடும்பத்தினர் ஒப்புதலோடு இருவரும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டனர்.

மகிழ்ச்சியாக சென்று கொண்டு இருந்த இவர்களது வாழ்வில் திடீரென்று மிகப்பெரிய சோகம் ஒன்று தாக்கியுள்ளது. அதாவது தீபக் எப்போதும்போல காலை தன்னுடைய வேலைக்கு சென்று இருக்கிறார். தீபக்கை பணிக்கு அனுப்பி வைத்துவிட்டு வேதவல்லி அருகில் இருக்கும் தன்னுடைய அப்பா அம்மாவைப் பார்ப்பதற்காக அவர்களது இல்லத்திற்கு சென்று இருக்கிறார்.

பெற்றோர் வீட்டிற்கு சென்று வந்த வேதவள்ளி வந்த சிறிது நேரத்திலேயே தன்னுடைய வீட்டிற்கு சென்று இருக்கிறார். உள்ளே சென்ற சில நிமிடங்களிலேயே அலாரம் சத்தம் கேட்டிருக்கிறது. வேதவல்லி தன்னுடைய உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார்.

உடனே அங்கிருந்த பொதுமக்கள் அனைவரும் வேதவல்லியை மீட்டு அருகில் இருந்த சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வேதவல்லி சிகிச்சை பலனின்றி துரதிஸ்டவசமாக உயிரிழந்துள்ளார். தன் மனைவி தீயிட்டு தற்கொலை செய்து கொண்டதை அறிந்த தீபக் , எலி மருந்து அருந்தி தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார் . மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளார்.

தகவல் அறிந்து வந்த போலீசார் இந்த வழக்கை விசாரணை செய்து வருகின்றனர். விசாரணையின்போது வேதவல்லிக்கு சிறுநீரகத்தில் கற்கள் இருந்ததாகவும் அந்த வலியை தாங்கிக் கொள்ள முடியாமல் தான் தற்கொலை முடிவுக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் வேதவல்லியின் தற்கொலைக்கான உண்மையான காரணத்தை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.