கன்னியாகுமரி! பொன் ஆரா? வசந்தகுமாரா? யார் முன்னிலை?

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் முன்னிலையில் உள்ளார்.


நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு  எண்ணிக்கையில் முன்னிலை நிலவரங்கள் வெளியாகிவருகின்றன.இதில் தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 38 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரங்கள் வந்தவண்ணம் உள்ளன. 

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கன்னியாகுமரி  மக்களவை தொகுதியில் காங்கிரஸ்  வேட்பாளர் வசந்தகுமார் முன்னிலையில் உள்ளார். இவர் சுமார் 15000 வாக்குகள் முன்னிலையில் உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகிவுள்ளன. பாஜக சார்பில் போட்டியில் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் பின்னடைவில் உள்ளார் என்பது குய்ப்பிடத்தக்கது.  இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 

தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.