அடேங்கப்பா... இத்தனை வகையான தானங்கள் இருக்கின்றனவா? ஒவ்வொரு தானத்திற்குமான பலன்கள்!

பகவத்கீதையில் கூறியிருப்பதைப் போல பலனை எதிர்பாராமல் நாம் பிறருக்கு செய்யும் உதவியால் அவரவர் குலம் தழைத்து செழித்து வளரும்.


நாம் இப்பிறவியில் செய்யும் கர்ம வினைகளையும் முற்பிறவியில் செய்த கர்ம வினைகளையும் களைக்க பரம்பொருளால் தரப்பட்ட மிகப்பெரிய வரப்பிரசாதம் 'தானம்' என்னும் செயல்களாகும். 

இந்த உலகில் பரம்பொருளான இறைவனால் உருவாக்கப்பட்ட அனைத்து உயிர்களாலும் தானம் செய்ய இயலும். ஆனால் ஆறாம் அறிவு என்னும் பகுத்தறிவு கொண்ட மனிதனால் கொடுக்கும் தானமே சிறப்பு வாய்ந்தது. அதனால் தான் என்னவோ நம் முன்னோர்கள் பிறவியிலே உயர்ந்த பிறவி 'மானுட பிறவி' என்று கூறுகின்றனர். 

இப்படிபட்ட உயர்ந்த பிறவியில் பிறந்த நாம், நம்மால் செய்ய முடியும் தான தர்மங்கள் மற்றும் அதனால் நாம் பிறவி எடுத்து வாழும் இந்த வாழ்க்கையில் உண்டாகும் பலன்களை பற்றி காண்போம். 

அன்ன தானம் - கடன் தொல்லைகள் நீங்கும் 

அரிசி தானம் - முன்ஜென்ம பாவங்கள் விலகும் 

ஆடைகள் தானம் - சுகபோக வாழ்வு அமையும் 

பால் தானம் - துன்பங்கள் விலகும் 

நெய் தானம் - பிணிகள் நீங்கும் 

தேங்காய் தானம் - எடுத்த காரியங்களில் வெற்றிகள் கிட்டும் 

தீப தானம் - முன்னோர்களின் ஆசிகள் கிட்டும் 

தேன் தானம் - புத்திர பாக்கியம் கிட்டும் 

பூமி தானம் - பிறவா நிலை உண்டாகும் 

பழங்கள் தானம் - மன அமைதி உண்டாகும் 

வஸ்திர தானம் - ஆயுள் விருத்தி உண்டாகும் 

கம்பளி தானம் - வெண்குஸ்ட நோய்களின் அறிகுறிகள் தென்பட்டால் அதிலிருந்து மீண்டு விடலாம் 

கோ தானம் - பித்ரு கடன் நீங்கும் 

தயிர் தானம் - இந்திரிய விருத்தி உண்டாகும் 

நெல்லிக்கனி தானம் - அறிவு மேம்படும் 

தங்கம் தானம் - தோஷம் நிவர்த்தியாகும் 

வெள்ளி தானம் - கவலைகள் நீங்கும் 

கோதுமை தானம் - ரிஷிக்கடன் அகலும் 

எண்ணெய் தானம் - ஆரோக்கியம் உண்டாகும் 

காலணி தானம் - பெரியோர்களை அவமதித்த பாவம் போக்கும் 

மாங்கல்ய சரடு தானம் - தீர்க்க மாங்கல்ய பலன் உண்டாகும் 

குடை தானம் - எண்ணிய எதிர்காலம் உண்டாகும் 

பாய் தானம் - அமைதியான மரணம் உண்டாகும் 

காய்கறிகள் தானம் - குழந்தை ஆரோக்கியம் மேம்படும் 

பூ தானம் - விரும்பிய இல்வாழ்க்கை அமையும் 

பொன் மாங்கல்ய தானம் - திருமண தடைகள் நீங்கும் 

மஞ்சள் தானம் - சுபிட்சம் உண்டாகும் 

எள் தானம் - சாந்தி உண்டாகும் 

வெல்ல தானம் - வம்ச விருத்தி உண்டாகும் 

தண்ணீர் தானம் - மன மகிழ்ச்சி உண்டாகும் 

சந்தன தானம் - கீர்த்தி உண்டாகும் 

புத்தகம் தானம் - கல்வி ஞானம் உண்டாகும் 

நம் சக்திக்கு இயன்ற அளவு தான தர்மங்களை செய்து நாமும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ வைப்போம். உடல் நலிவுற்றோர்கள் மற்றும் இயலாத சூழலில் வாழ்பவர்க்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்து, நாம் அவர்களின் இன்பங்களின் மூலம் எங்கும் நீக்கமற நிறைந்துள்ள பரம்பொருளான இறைவனை காண்போம்.