கருணாநிதி காலத்தில் இருந்தே தி.மு.க. என்றாலே பணம் பிடுங்கும் கட்சி என்றுதான் சொல்வார்கள். சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தேர்தலில் நிற்க விரும்பும் நபர்களிடம் பணம் எவ்வளவு இருக்கிறது என்பதுதான் முதல் கேள்வியாக இருக்கிறதாம்.
துட்டு வெட்டுனாத்தான் தி.மு.க.வில் சீட்டு..! பணம் பறிக்கும் பல்வேறு கும்பல்கள்
இதற்காக, தமிழகம் முழுவதும் ஐபேக் ஆட்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஆங்காங்கே உள்ள திமுக புள்ளிகளின் பின்னணி பற்றி விசாரிக்கிறார்கள். இதில் சீட்டுக்கு ஆசைப்படும் பசையுள்ள பார்ட்டிகளை தொடர்புகொண்டு தூண்டில் போடுகிறார்கள்.
எங்களுக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்தா, உங்க பேர் பட்டியலில் முதலாவதாக இருக்கும் என்று ஆசை காட்டியே பல இடங்களில் லட்சக்கணக்கில் பணத்தை உருவுகிறார்கள். ஐபேக்கிற்கு அடுத்தபடியாக இந்த ஆட்டத்தில் இருப்பது உதயநிதி அணிதான். இந்த அணியின் சீட் பேர விவகாரங்களை உதயாவுக்கு மிக நெருக்கமான அன்பில் மகேஷ் பொய்யாமொழிதான் டீல் பண்ணுகிறாராம்.
ஆம், வரும் தேர்தலில் 25 முதல் 30 சதவீதத்திற்கும் குறையாமல் இளைஞர் அணிக்கு சீட் கிடைக்கும். அதனால், எம்.எல்.ஏ கனவில் இருப்பவர்கள் இப்போதே பணப்பெட்டியை திறந்து காட்டுங்கள் என்று கூறுகிறாராம். உதயநிதி தவிர ஸ்டாலின் வீட்டு கிச்சன் கேபினட்டும் பலரிடமும் உறுதி அளித்து பணம் வாங்கியிருப்பதகாச் சொல்லப்படுகிறது.
இதுபோக மகளிரணி செயலாளர் கனிமொழியும் ஒரு பெரிய பட்டியலுடன் வலம் வருகிறார். கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த செல்வி, தமிழரசு என பலரும் சீட்டு வாங்கித் தருவதாக பேரம் பேசி வருவதாகக் கூறப்படுகிறது. இதுபோக அந்தந்த மாவட்ட செயலாளர்களும், எம்.பிக்களும் ‘’நிச்சயம் உங்களுக்குத்தான் சீட்டு’’ என பலரிடமும் கொக்கிபோட்டு வருகின்றனர்.
இப்படி ஆளாளுக்கு பணம் கேட்டா எங்கே போறது என்று தவிக்கிறார்கள், தி.மு.க பிரமுகர்கள்.