வந்தா ராஜாவாதான் வருவேன்- டீஸர் வெளியானது!

சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு, கேத்தரின் தெரசா, மேஹா, பிரபு, ரம்யாகிருஷ்ணன், ரோபோ ஷங்கர், மொட்டை ராஜேந்திரன், யோகிபாபு என நடிகர் பட்டாளமே இணைந்து நடித்துள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீசரானது இன்று மதியம் 12:30 மணிக்கு வெளியானது. இது சிம்பு ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது


        “என்னை நம்பி கெட்டவங்க யாருமில்ல”… “ஆனால் நம்பாமல் கெட்டவங்க நிறையபேர் இருக்காங்க” என்று சிம்புவின் குரலில் இந்த டீஸர் ஆரம்பிக்கின்றது.

       ஹிப் ஹாப் ஆதி இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார். காதல் காமெடி ஆக்க்ஷன் நிறைந்த படமாக இருக்கும் என்று தெரிகின்றது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படமானது பொங்கலுக்கு வெளிவரவுள்ளது.