நீ என்ன எப்டி வேணும்னாலும் நினைச்சிக்கோ..! ஆனா ஐ லவ் யூ..! அண்ணன் அருண் விஜயை நினைத்து உருகிய வனிதா!

பிக்பாஸ் பிரபலம் வனிதா விஜயகுமார் , தன் அண்ணனான அருண் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மூலம் தெரிவித்திருக்கிறார்.


நடிகர் விஜயகுமாரின் மகன் மற்றும் தமிழ் திரைப்பட நடிகருமான அருண் விஜய் நேற்றையதினம் தன்னுடைய பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார். இவரது பிறந்தநாளை ஒட்டி பலரும் சமூகவலைத்தள பக்கத்தின் மூலம் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் இருந்தனர்.

அந்தவகையில் நடிகர் அருண் விஜய்க்கு சர்ச்சைக்கு பெயர் போன ஒருவர் பதிவிட்ட பிறந்தநாள் வாழ்த்து செய்தி மட்டும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தது. அந்த ஒருவர் வேறு யாருமில்லை வனிதா விஜயகுமார் தான்.

ஏற்கனவே வனிதா விஜயகுமாருக்கும் அவரது தந்தை மற்றும் சகோதரிகளுக்கு இடையே பெரும் பிரச்சினை நிலவி வருகிறது. இருப்பினும் வனிதா இத்தகைய பதிவை வெளியிட்டு இருப்பது ரசிகர்களின் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் வனிதா அந்த பதிவில், "கருத்து வேறுபாடுகளை தீர்த்துக் கொள்ளலாம். ஒரு வாழ்க்கை ஒரு குடும்பம் ஒரே ரத்தம். நீங்களும், நானும் வெவ்வேறு விதமாக பயணிக்கலாம் ஆனால் ஒன்றாகத் தான் துவங்கினோம். நம் குடும்பத்தை பெருமையடையச் செய்ய வேண்டும். #HBDArunVijay உங்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ ஐ லவ் யூ" என்று தன் சகோதரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூறியிருக்கிறார். 

தற்போது இந்த பதிவானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது மேலும் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.