என் தளபதி..! என் சூப்பர் ஸ்டார்..! என் தல..! எல்லாமே அவன் ஒருவன் தான்! பிக்பாஸ் வனிதா வெளியிட்ட செம வீடியோ!

"தளபதி , சூப்பர் ஸ்டார் , உலக நாயகன், தல, என் வாழ்க்கை எல்லாமே நீ தான்" என்று தன்னுடைய மகன் ஸ்ரீஹரியின் புகைப்படத்தை வெளியீட்டு புதிய பதிவு ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கிறார் பிக்பாஸ் புகழ் வனிதா விஜயகுமார்.


தமிழ் திரையுலகில் சந்திரலேகா திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் நடிகை வனிதா விஜயகுமார். திரைப்படத்தை தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்த இவர் கடந்த 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை முதலில் திருமணம் செய்து கொண்டார். பின்னர் இவர்கள் இருவருக்கும் ஸ்ரீஹரி என்ற ஒரு மகனும் இருக்கிறார்.

இந்நிலையில் நடிகை வனிதா தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆகாஷ் என்பவரை விட்டு பிரிந்து கடந்த 2007 ஆம் ஆண்டு சட்டப்படி விவாகரத்து பெற்றுக் கொண்டார். இதனைத்தொடர்ந்து விவாகரத்து பெற்றுக் கொண்ட அதே ஆண்டு ஆனந்த் ராஜன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். துரதிஷ்டவசமாக நடிகை வனிதா விஜயகுமார் இரண்டாவது திருமணம் நிலைக்கவில்லை என்றுதான் கூற வேண்டும். அவருக்கும் அவருடைய இரண்டாவது கணவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2010ஆம் ஆண்டு தன்னுடைய இரண்டாவது கணவருடனும் விவாகரத்து செய்து கொண்டார்.

நீண்டகாலமாகவே திரைத்துறையை விட்டு விலகி இருக்கும் நடிகை வனிதா விஜயகுமார் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி துவங்கிய முதல் இருந்தே தன்னுடைய மூத்த மகனான ஸ்ரீஹரியை விட்டுத் தான் பிரிந்து வாழ்வதால் மிகுந்த வேதனை அடைவதாகவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது. வனிதா தற்போது தன்னுடைய இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். அவருடைய மூத்த மகனான ஸ்ரீஹரி முதல் கணவரான ஆகாஷுடன் வளர்ந்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை வனிதா தன்னுடைய மூத்த மகனான ஸ்ரீஹரியின் புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு அதற்கு "தளபதி , சூப்பர் ஸ்டார் , உலக நாயகன், தல, என் வாழ்க்கை எல்லாமே நீ தான்" என்று ஹேஷ்டேக் வெளியிட்டு பதிவு செய்திருக்கிறார். மேலும் என்மகன் என்னப்பா விஜயகுமாரை போலவே இருக்கிறார் என்றும் அவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.