தப்பித்தார் கவின்! இந்த வாரம் பிக்பாஸ் எலிமினேசன் இவர் தான்! சற்று முன் வெளியான தகவல்!

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியானது தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


உலகநாயகன் கமலஹாசன் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 3 ஆண்டுகளாக தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர் எலிமினேட் செய்யப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த வாரம் யார் எலிமினேட் செய்யப்போகிறார்? என்பது பிக்பாஸ் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவின் மற்றும் லாஸ்லியா ஆகியோர் இருவரின் காதல் விவகாரம் அவர்களது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்த வாரம் கவின் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்பாராத விதமாக வனிதா வெளியேற்றப்பட போகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கவின் இந்த வாரம் காப்பாற்றபட போகிறார் என்று கூறப்படுகிறது. 

நடிகை வனிதா ஏற்கனவே ஒருமுறை பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டார். பின்பு வைல்ட் கார்ட் மூலம் இரண்டாவது முறையாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு யார் வெளியேற்றப்படுவார் என்று ஒரு கருத்துக்கணிப்பு ரசிகர்களிடத்தில் ஏற்படுத்தப்பட்டது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர். அதில் பல ரசிகர்கள் இந்த வாரம் வனிதா தான் இந்த வீட்டை விட்டு வெளியே செல்வார் என்று கூறி வருகின்றனர். அதற்கு இரண்டாவது இடத்தில் கவின் அமர்ந்திருக்கிறார் 

மேலும் மூன்றாவது நான்காவது இடத்தில் கவின் மற்றும் ஷெரின் ஆகியோர் உள்ளனர். இதனை வைத்துப் பார்த்தால் இந்த வாரம் வனிதா தான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார் என்று தெளிவாக புரிகிறது. இருப்பினும் யார் இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி வசப்பட போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.