50 அடி பள்ளத்தில் உருண்ட ஆம்னி வேன்! டிரைவரின் சிறு தவறால் பறிபோன அக்காள், தம்பி உயிர்!

50 அடி பள்ளத்தில் ஆம்னி வேன் கவிழ்ந்ததில் அண்ணன் தங்கை உயிரிழந்த சம்பவமானது கொடைக்கானலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கொடைக்கானலில் அண்ணாநகர் என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்கு சாதிக் என்பவர் வசித்து வருகிறார். தன்னுடைய குடும்பத்துடன் ஆம்னி வேனில் திருச்சியில் ஒரு குடும்ப நிகழ்ச்சிக்காக சென்று கொண்டிருந்தனர்.

நிகழ்ச்சியை முடித்துவிட்டு மீண்டும் கொடைக்கானலுக்கு வந்துகொண்டிருந்தனர். நள்ளிரவு நேரத்தில் வந்து கொண்டிருந்ததால் சாதிக் சற்று கண்ணயர்ந்தார். அப்போது எதிர்பாராவிதமாக ஆம்னி பஸ் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது.

சாதிக்கின் மகனான ராசிக் பரீத் மற்றும் மகள் ரூபிதா ஷெரின்  சம்பவயிடத்திலேயே உயிரிழந்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் சாதிக் மற்றும் அவருடைய மனைவி படுகாயமடைந்தனர். அவர்களை தேனி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவமானது கொடைக்கானல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.