சாலையில் திடீரென வேன் கதவை திறந்த டிரைவர்! பைக்கில் வந்த 2 பேருக்கு நேர்ந்த கொடூரம்!

தெலுங்கானா மாநிலத்தில் பரபரப்பான சாலையில் மினி வேன் டிரைவர் சற்றும் பொறுப்பின்றி திடீரென மினி வேன் கதவைத் திறந்ததால் அதில் மோதி நிலை தடுமாறிய இருசக்கரவாகன ஓட்டியும் பெண்ணும், பின்னால் வந்த லாரி சக்கரத்தில் சிக்கி நசுங்கி உயிரிழந்த சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன.


சங்காரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த செய்தி ரெட்டி என்பவர் தனது மனைவியின் சகோதரியான கனகா மகாலட்சுமியை அவரது அலுவலகத்தில் விடுவதற்காக இருசக்கர வாகனத்தில் அழைத்துச்  சென்றார். 

பரபரப்பான ஒரு சாலையில் சென்று கொண்டிருந்த போது சாலையில் நின்றிருந்த ஒரு மினி வேனின் ஓட்டுநர் சற்றும் பொறுப்பின்றி பின்னால் எவராவது வருகின்றனரா என்று கூட கவனிக்காமல் வேனின் கதவைத் திறக்க கதவின் மீது மோதிய இருசக்கர வகனாம் நிலை தடுமாறியதில் பின்னால் வந்த லாரியின் சக்கரத்தில் சிக்கி நசுங்கிய செய்திரெட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கனகா மகாலட்சுமி உயிரிழந்தார். 

விபத்து தொடர்பாக லாரி ஓட்டுநரின் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது  செய்துள்ளனர். பொறுப்பின்றி தவறு செய்த மினி வேன் டிரைவர் எந்தப் பாதிப்பும் இன்றி இருப்பது சட்டத்தின் குறைபாடா? சமூகத்தின் குறைபாடா?