அதிவேகத்தில் சென்ற ஜீப்! திடீரென வெடித்த டயர்! எதிரே வந்த வேனால் பயங்கரம்! 13 பேர் உயிர் போன பரிதாபம்!

வேன் மீது ஜீப் மோதியதில் 13 பேர் உயிரிழந்த சம்பவமானது ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ராஜஸ்தான் மாநிலத்தில் ஜோத்பூர் என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. அங்குள்ள நெடுஞ்சாலையில் வேன் ஒன்று பயணிகளை ஏற்றி சென்றுகொண்டிருந்தது. அம்மாவட்டத்திற்கு உட்பட்ட பலிசர் என்னும் கிராமத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராவிதமாக முன் டயர் வெடித்தது.

இதனால் வேன் ஓட்டுநர் நிலை தடுமாறினார். அவர் கட்டுப்பாட்டை இழந்ததால் மறுமுனையில்  வந்து கொண்டிருந்த ஜீப் மீது வேகமாக மோதியுள்ளார். இந்த பயங்கரமான விபத்தில் இரு வாகனங்களையும் சேர்ந்த 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 12 பேர் உயிருக்குப் போராடும் நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த கோர விபத்து குறித்து அப்பகுதி பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் படுகாயம் அடைந்தவர்களை மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வீடு வந்த அவர்களின் சடலங்களை பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

விபத்தில் படுகாயமடைந்த அவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த கோர விபத்து குறித்து ராஜஸ்தான் மாநிலத்தின் முதலமைச்சரான அசோக் கெலாட் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவமானது ராஜஸ்தான் மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.