ஸ்டாலின் திட்டத்துக்கு வைகோ திடீர் எதிர்ப்பு..? கூட்டணியில் இப்படி ஒரு மோதலா.?

வரும் சட்டமன்றத் தேர்தலில் 200 இடங்களில் தி.மு.க. போட்டியிட வேண்டும் என்று ஆசைப்படுகிறார் ஸ்டாலின். அதனால் ம.தி.மு.க. போன்றா குட்டிக் கட்சிகளை தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் நிறுத்த வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார்.


அப்படித்தான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் ம.தி.மு.க.வின் கணேச மூர்த்தியை உதயசூரியன் சின்னத்தில் நிறுத்திவைத்தார். அதனால், சட்டமன்றத் தேர்தலில் ம.தி.மு.க. அடிமை போன்று நாம் சொன்னதை செய்வார்கள் என்று எதிர்பார்த்திருந்தார் ஸ்டாலின்.

ஆனால், தங்களுக்கும் ரோஷம் இருக்கிறது என்று நிரூபித்துவிட்டார் வைகோ. ஆம், இன்று திடீரென செய்தியாளர்களை சந்தித்த வைகோ, தி.மு.க.வின் திட்டத்துக்கு மூடுவிழா நடத்திவிட்டார்.

வரும் தேர்தலில், மறுமலர்ச்சி தி.மு.கழகம், தனி சின்னத்தில்தான் போட்டியிடும் என்று அறிவித்துவிட்டார். ஏற்கனவே திருமாவளவனும் தனிச்சின்னம் என்பதில் உறுதியாக இருக்கிறார். இந்த நேரத்தில் வைகோவும் ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பது தி.மு.க.வினரை அதிர வைத்துள்ளது.