ராஜ்யசபா சீட் நாங்கள் கேட்காமலேயே கொடுத்தார் ஸ்டாலின்! வைகோ வெளியிட்ட புது தகவல்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து வைகோ பல விஷயங்களை கூறினார்.


மக்கள் அவையில் ஒரு இடமும் மாநிலங்கள் அவையில் ஒரு இடம் என்ற அடிப்படையில் ஒப்பந்தம் இட்டு 21 தொகுதிகளில்  தி மு க வெற்றி பெற ஆதரவு அளித்து தி மு க கூட்டனிக்கு கடுமையாக உழைப்போம் என்று பொதுக்குழு தீர்மானித்து உள்ளோம்.

கூட்டணியில் கொடுத்த இடத்தை மன மகிழ்வோடு ஏற்ககிறோம் , மாநிலங்கவையில் இடம் நாங்கள் கேட்ககவே இல்லை ஸ்டாலின்  அவர்களாக கொடுத்தார்கள்.

தே மு தி க  அ தி மு கவோடு சேர்ந்தாலும் சரி சேராவிட்டாலும் அந்த கூட்டணி 40 இடங்களிலும் தோல்வி அடையும். நாடாளுமன்ற தேர்தலில் எந்த சின்னத்தில் போட்டியிடுவது குறித்த முடிவு இன்னும் எடுக்கவில்லை.

இவ்வாறு வைகோ கூறியுள்ளார். எந்த சின்னத்தில் போட்டி என்று முடிவெடுக்கவில்லை என வைகோ கூறியுள்ளதால் அவர் உதய சூரியன் சின்னத்தில் தான் தனது வேட்பாளரை நிறுத்துவார் என்று கூறப்படுகிறது.