திமுகவை வைகோவே தோற்கடிப்பார்! பொன்னார் மரண கலாய்!

அதிமுக பாஜக கூட்டணியை பிளவுபடுத்த முயற்சி நடைபெறுவதாக தமிழக முதல்வர் கூறிய கருத்தில் உண்மை உள்ளது.


கூட்டணியை பிளவுபடுத்த பலபேர் முயற்சித்து கொண்டு இருக்கின்றனர்.அதிமுக பாஜக கூட்டணியை பிளவுபடுத்த நடைபெறும் முயற்சி மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும். எதிர்க்கட்சி கூட்டணியில் குழப்பம் விளைவிக்க வேண்டிய அவசியம் இல்லை, திமுக கூட்டணியில் வைகோ உட்பட நால்வர் அணி இருக்கும் வரையில் யாருக்கும் எந்த வேலையும் இல்லை, அவர்களே அந்த கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துவார்கள்.

வைகோ இது வரை திமுகவை தாக்கு தாக்கு என தாக்கிவிட்டு இப்போது தாங்கு தாங்கு என தாங்கும் நிலையை பார்த்தால் வருத்தமாக உள்ளது.பாஜக மீது உள்ள விமர்சனங்கள் பழுத்த மரம் கல்லடி படும் என்ற பழமொழியை காட்டுகிறது.குமரியில் வளர்ச்சி திட்டங்கள் நடைபெற வில்லை என குற்றம் சாட்டும் காங்கிரஸ் செயல் தலைவர் வசந்த குமாருக்கு அவர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் நாங்குநேரி தொகுதி பற்றியே தெரியாது, இதில் குமரிமாவட்டத்தை பற்றி அவருக்கு என்ன தெரியும்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்து துறை இணை அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் பேட்டி.