மதிமுகவை ஸ்டாலின் காலடியில் சரண்டர் செய்த வைகோ!

வைகோ-ஸ்டாலின்


மூன்று தொகுதிகளுக்காக வைகோ கொந்தளித்து வருகிறார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே ஒரு சீட்டு போதும் என்று சரண் அடைந்திருக்கிறார்.

இன்றோடு தி.மு.க. கூட்டணியின் கணக்கு முடிவுக்கு வந்துவிட்டது. காங்கிரஸ் 10, விடுதலைசிறுத்தை 2, மார்க்சிஸ்ட் 2, இந்திய கம்யூனிஸ்ட் 2, இந்திய ஜனநாயக கட்சி 1, கொங்கு ஈஸ்வரன் 1, இந்திய முஸ்லீம் லீக் 1 , வைகோ1 என 20 இடங்களை கூட்டணிக்குக் கொடுத்துவிட்டார். அந்த வகையில் 20 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிருக்கிறது.

ஒரு ராஜ்யசபா சீட் மற்றும் 40 தொகுதிகளிலும் பிரசாரம் செய்யவேண்டும் என்பதுதான் வைகோவுக்கு தி.மு.க. கொடுத்திருக்கும் அசைன்மெண்ட். மேலும் அந்த ஒரு தொகுதியிலும்கூட உதயசூரியன் சின்னத்தில் நிற்கலாம் என்று கேட்டிருக்கிறார்களாம்.

அ.தி.மு.க. கூட்டணியில் கிருஷ்ணசாமி இரட்டை இலை சின்னத்தில் நிற்கவே முடியாது என்று டென்ஷாகி தனி சின்னத்தில் நிற்கிறார். ஆனால், வைகோவோ யோசிக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்.

கட்சியைக் கொண்டுபோய் ஸ்டாலின் காலுக்குக் கீழே போட்டுவிட்டாரே என்று வைகோ கட்சியின் நிர்வாகிகள் கொந்தளிக்கிறார்கள். ஒரே ஒரு ராஜ்யசபா சீட்டுக்காக இப்படி காலில் விழலாமா வைகோ?