அப்பலோவில் வைகோ திடீர் அனுமதி! நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து! என்ன ஆனது?

உடல் நலக்குறைவு காரணமாக வைகோ திடீரென மதுரை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை எம்பியுமான வைகோ இந்த வாரம் நியுட்ரினோ திட்டத்திற்கு எதிராக பேரணி நடத்த முடிவு செய்துள்ளார். மேலும் மக்களிடையே நியுட்ரினோ திட்டத்திற்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யவும் திட்டமிட்டிருந்தார். மதுரையில் இருந்து இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

இதற்காக வைகோ இன்று மதுரை சென்று இருந்தார். மதுரையில் ஓட்டலில் தங்கியிருந்த வைகோவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக அவரை அருகே இருந்த அப்பலோ மருத்துவமைனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அனுமதிக்கப்பட்ட வைகோவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே வைகோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து மதிமுக சார்பில் விளக்கம் அளித்து அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், மருத்துவப் பரிசோதனைக்காக, இன்று (18.08.2019), மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். உடல்நலக் குறைவு மருத்துவர்கள் ஆலோசனைப்படி ஓய்வு எடுக்க வேண்டிய நிலையில் இருப்பதால்,  20,21,22 ஆகிய நாள்களில்தலைவர் வைகோ அவர்கள்தேனி மாவட்டத்தில் மேற்கொள்ள இருந்த நியூட்ரினோ எதிர்ப்பு பிரச்சாரம் ஒத்தி வைக்கப்படுகின்றது

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் மருத்துவர்கள் ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தும் அளவிற்கு வைகோவிற்கு அப்படி என்ன உடலில் பிரச்சனை என்று விவாதம் நடைபெற்று வருகிறது.