நடிகையை விடாமல் துரத்தி துரத்தி இளைஞர் செய்த தகாத செயல்! பிறகு நடந்த விபரீதம்!

அழகான நடிகைகளுக்கு அவ்வப்போது ரசிகர்களால் சில தொந்தரவுகள்  ஏற்படுவதுண்டு.


 நடிகைகளில் தற்போது இந்திய சினிமாவை கலக்கி வருபவர்களுள் ஒருவர் வானி கபூர். இவர் நடித்த படங்களுள் சிலவற்றிற்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.இவருக்கு வினோதமான வகையில் ரசிகர் ஒருவரால் தொந்தரவு ஏற்படுத்தியுள்ளது. வானி கபூர் மும்பை மாநகரின் வெர்ஸோவா பகுதியில் இருந்து சாண்ட்ரா பகுதிக்கு காரில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அவரை ஒரு ரசிகர் பைக்கில் பின்தொடர்ந்தார்.

வானியின் கார் டிரைவர் வேகமாக ஓட்டியதனால், எளிதில் அவரைக கடந்து சென்றார். ஆனால் அந்த ரசிகர் சாலையிலேயே இருந்து, அவர் திரும்பும் வரை காத்திருந்துள்ளார். வானியிடம் எப்படியாவது பேசிட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்துள்ளார். மேலும் இருசக்கர வாகனத்தில் இருந்தபடி வாணியை நோக்கி ஆபாச செய்கையும் செய்துள்ளார்.

இதனால் மிகவும் பயந்துபோன வானி, வெர்ஸோவா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.