மு.க.ஸ்டாலினை சுற்றி உள்ள அந்த 3 பேர்..! அவர்கள் வைப்பது தான் திமுகவில் சட்டம்! உயர்மட்ட ரகசியம் சொல்லும் துரைசாமி!

மு.க.ஸ்டாலினை சுற்றி உள்ள 3 பேர் வைப்பது தான் சட்டம் என்றும் அவர்கள் சொல்படித்தான் ஸ்டாலின் திமுகவை நடத்துவதாகவும் அக்கட்சியில் இருந்து நீக்கப்படுவதற்கு முன் வி.பி.துரைசாமி பேட்டி அளித்துள்ளார்.


பாஜக மாநிலத் தலைவர் எல் முருகனை சந்தித்ததை தொடர்ந்து விபி துரைசாமி எந்த நேரத்திலும் திமுகவில் இருந்து நீக்கப்படலாம் என்று கூறப்பட்டது. இறுதியாக அவரை கட்சிப்பதவியில் இருந்து நீக்கி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். துணை பொதுச் செயலாளர் பதவி பறிக்கப்படுவதற்க முன்னதாக துரைசாமி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, 

மு.க.ஸ்டாலின் நல்லவர். அவரைச் சுற்றியிருக்கும் மூணு பேரு தப்புத்தப்பா அவருக்கு சொல்லிக்கொடுக்கிறாங்க. அதையெல்லாம் அவரு கேட்கக்கூடாது என்பதுதான் என் வேண்டுகோள். அந்த மூன்று பேர் சொல்வதை கேட்டு ஸ்டாலின் நடப்பதால் தான் பிரச்சனை. என்னை போன்ற கட்சியில் சீனியர்களை அந்த மூன்று பேர் மதிப்பது இல்லை.

என் பதவியை பறிக்க திட்டமிடுகிறார்கள். எடுக்கட்டும். பார்க்கலாம். நானா பயப்படுவேன்? நேரு, வேலு, பாரதி... சேர்ந்தா சும்மாவிடுவார்களா..?ஸ்டாலின் குடும்ப உறுப்பினர் மூலமாக பிரஸர் கொடுப்பாங்க. ஸ்டாலினிடம் இருந்து எனக்கு நோட்டீஸ் வரலாம். அது வந்தா... சிலருகிட்ட சில கேள்விகள் கேட்க இருக்கிறேன். அந்தக் கேள்விக்கு எல்லாம் பதில் தரும் அதிகாரம் யாருக்கு இருக்கிறது?

இவ்வாறு பேட்டி அளித்துள்ளார் துரைசாமி. இதன் மூலம் திமுகவில் ஆர்.எஸ்.பாரதி, கே.என்.நேரு மற்றும் எ.வ.வேலு வைப்பது தான் சட்டம் என்பது தெரியவந்துள்ளது. இதற்கிடையே துரைசாமியை துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.