குடி போதையில் காரை ஓட்டி விபத்து! டிவி தொகுப்பாளினியால் நேர்ந்த விபரீதம்!

டிவி தொகுப்பாளினி ரேஷ்மி கவுதமி, பாதசாரி மீது கார் ஏற்றி விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.


ஜபர்தஸ்த், தீ போன்ற டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பங்கேற்று கவனம் பெற்றவர் ரேஷ்மி கவுதம். இதுதவிர, ஏராளமான தெலுங்கு படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். 

இவர், ஞாயிறு விடுமுறை தினத்தில், விசாகப்பட்டினம் அருகே உள்ள குர்மண்ணப்பள்ளம் பகுதியில் நள்ளிரவு காரை ஓட்டிச் சென்று, பாதசாரி மீது ஏற்றி, விபத்து ஏற்படுத்தியுள்ளார். 

இதில், அந்த பாதசாரி படுகாயம் அடைந்துள்ளார். அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் போலீசார் சேர்த்துள்ளனர். டிவி தொகுப்பாளினியும், நடிகையுமான ரேஷ்மி கவுதமி வழக்குப் பதிந்த போலீசார் இதுபற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விபத்திற்கு தொகுப்பாளினி குடிபோதையில் இருந்தது காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.