அவனும் என்னை விட்டு போய்விட்டான்! விவாகரத்து செய்த விஜய் டிவி தொகுப்பாளினிக்கு அடுத்து நேர்ந்த சோகம்!

நீ இல்லாமல் நான் எப்படிடா என பிரபல தொகுப்பாளினி ரம்யா தன்னுடைய செல்லப்பிராணியின் இறப்பு குறித்து மனமுருகி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.


பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக வலம் வந்தவர் ரம்யா. இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மட்டுமில்லாமல் பல விழாக்களையும் பொது நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியாக வலம் வருகிறார். அதுமட்டுமில்லாமல் பல திரைப்படங்களில் துணை நடிகையாகவும் இவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அதிலும் குறிப்பாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் மாஸ்டர் திரைப் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தொகுப்பாளினி ரம்யா நடித்திருக்கிறார். உலகை அச்சுறுத்தி வரும் கொரொனா வைரசினால் இந்த திரைப்படத்தின் வெளியீடு தாமத படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நடிகை மற்றும் தொகுப்பாளினியாக வலம் வரும் ரம்யா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனமுருகி புதிய பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்தப் பதிவில் தன்னுடைய செல்ல பிராணியான மைலோ என்கிற நாய் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்ததாக குறிப்பிட்டு இருக்கிறார். 

இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் மைலோ என்கிற நாயை வளர்த்து வருகிறார். பொதுவாக ஒரு சில மனிதர்களைப் போலவே தங்களுடைய செல்லப் பிராணிகளிடமும் அன்பு காட்டுவதில் மிகச் சிறந்தவர்களாக இருப்பர். அதேபோல்தான் ரம்யாவும் தன்னுடைய செல்லப்பிராணியை இடம் மிகவும் நெருக்கமாகும் அன்பாகவும் இருந்து வந்திருக்கிறார்.

அப்படி இருக்கும் சூழ்நிலையில் அவர்களது செல்லப்பிராணி அவர்களை விட்டு பிரியும் பொழுது எதுவும் மிகப்பெரிய சொந்தமே தங்களை விட்டுப் பிரியும் அளவிற்கு அவர்கள் வருத்தப்படுவார். அதேபோல் தான் நடிகை மற்றும் தொகுப்பாளினியான ரம்யா தன்னுடைய மயில் இழப்பையும் மிகப்பெரிய இழப்பாக கருதி தனது சோகத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். 

உள்ள உலக

உலகமே மிகப்பெரிய தொற்று வைரஸ் உடன் போராடிக் கொண்டிருக்கும் போது என்னுடைய மைலோவும் மிகவும் கடுமையான நோயுடன் போராடிக் கொண்டிருந்தது. உடல்நிலை சரியில்லாததால் அடுத்தடுத்து பல அறுவை சிகிச்சைகள் என்னுடைய மைலோவிற்கு செய்யப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி என்னுடைய மைலோ பரிதாபமாக சிகிச்சை பலனின்றி என்னுடைய மயிலோ பரிதாபமாக இன்று காலை உயிர் இழந்து விட்டது.

என்னுடைய வாழ்க்கையில் ஒரு பகுதியை நான் இழந்து விட்டது போல் தோன்றுகிறது. என் மீது அதிக அளவில் அன்பு செலுத்தியது அவன் தான். என்னுடைய குழந்தை, செல்லம், உலகம் எல்லாமே அவன்தான். உன்னை தினமும் நான் மிஸ் செய்து வருகிறேன். இந்த உலகில் ஏதோ ஒரு முனையில் ஏதாவது ஒரு தருணத்தில் நிச்சயம் உன்னை நான் சந்திப்பேன் என்று ரம்யா அந்த பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்.

ரம்யாவின் இந்த பதிவிற்கு அவரது ரசிகர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.