இடுப்பு அழகி ரம்யாவுக்கு செம டஃப்..! களம் இறங்கிய சன் டிவி விஜே..! யார்? ஏன் தெரியுமா?

பிரபல டிவி தொகுப்பாளினி மகேஸ்வரி போட்டோ ஷூட் நடத்தி தனது கவர்ச்சி புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார்.


சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் மகேஸ்வரி ஆவார். பின்னர் குயில், சென்னை 28 இரண்டாம் பாகம் போன்ற படங்களில் நடித்திருந்தார். மேலும் தாயுமானவன் மற்றும் புதுக்கவிதை ஆகிய சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் பிரபலமானார். அதன் பின்னர் திருமணம் செய்து கொண்டு சின்னத்திரையில் நடிப்பதற்கு ஒரு பிரேக் கொடுத்திருந்தார்.

தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பேட்ட ராப் என்ற நிகழ்ச்சியை மகேஸ்வரி தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் தற்போது தொகுப்பாளினி மகேஸ்வரி கவர்ச்சி போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். தற்போது அந்த போட்டோஷுட்டில் எடுக்கப்பட்ட மகேஸ்வரியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட் ஆகி வருகின்றது.

கடந்த வருடம் நடிகை ரம்யா பாண்டியன் மொட்டை மாடியில் ஒரு போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார். தற்போது அவருக்கு டஃப் கொடுக்கும் வகையில் டிவி தொகுப்பாளினி மகேஸ்வரி நடத்தியுள்ள போட்டோ ஷூட் ஆனது தற்போது வைரலாக பரவி வருகிறது. எல்லாம் பட வாய்ப்புகளை எதிர்பார்த்து தான் என்கிறார்கள்.