ராட்டினத்தில் இருந்து விழுந்து சிறுமி உயிரிழப்பு! விஜிபி தீம் பார்க் மீது பகீர் புகார்! அதிர்ச்சியில் போலீஸ்!

விஜிபி பொழுதுபோக்கு பூங்கா மீது கடந்த 2016 ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் இதுவரை எந்த ஒரு தீர்ப்பும் வராத நிலையில் வழக்கு தொடர்ந்தவர் மேல்முறையீட்டுக்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார்.


இந்நிலையில் அந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கீழ் நீதிமன்றத்திற்கு இந்த வழக்கை விரைவில் முடிக்க கோரி உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் மிகவும் பழமையான பொழுதுபோக்கு பூங்காவாக  விளங்குவது விஜிபி இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தங்களது விடுமுறை நாளை முழுமையாக கழிக்க இங்கு தான் வருவார்கள். அங்கு குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் கன தனித்தனியே விளையாட்டுக்கள் உள்ளன.

கடந்த 2016 ஆம் ஆண்டு ராட்சத ராட்டினத்தில் ஏற்பட்ட ஒரு விபத்து காரணமாக ஒரு குழந்தை உயிரிழந்தது.இந்நிலையில் அதன்பேரில் தொடரப்பட்ட வழக்கில் இதுவரை எந்த ஒரு தீர்வும் கிடைக்கப் பெறாத நிலையில் குழந்தையின் தந்தை மேல்முறையீட்டுக்காக சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். 

பாபு மற்றும் கலைச்செல்வி குடும்பத்தார் தனது குழந்தை பாவனாவுடன் பொழுதுபோக்கு பூங்காவிற்கு சென்றுள்ளனர்.அப்போது பாவனா மற்றும் அவரது தாய் கலைச்செல்வி இருவரும் ராட்டினத்தில் ஏறி விளையாடி உள்ளனர்.அப்போது திடீரென ராட்டினத்தில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக ராட்டினத்தில் விபத்து ஏற்பட்டது.

இந்நிலையில் கீழே விழுந்த கலைச்செல்வி மற்றும் பாவனா ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது இந்நிலையில் அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் இந்நிலையில் பாவனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதையடுத்து பாபு நீலாங்கரை காவல் துறையில் புகார் அளித்துள்ளார் புகாரை விசாரித்த காவல்துறையினர் விபத்தில் குழந்தைக்கு சிறிய காயம் மட்டுமே ஏற்பட்டுள்ளது என அந்த வழக்கை முடித்தனர்.

இந்நிலையில் அதிர்ச்சி அடைந்த பாபு பூங்காவில் உள்ள உதவியாளர்களின் அலட்சியத்தால் மட்டுமே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. என மேல்முறையீட்டுக்காக சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கீழ் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக மேலும் விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளார்.