வாடகை கேட்ட அதிமுக பிரமுகர்! ஆளையே காலி செய்த விசிக பிரமுகர்! வேலூர் திகுதிகு!

அதிமுக பிரமுகரை விடுதலை சிறுத்தை கட்சியினர் கொலை செய்துள்ள சம்பவமானது வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!!!


ஏப்ரல் மாதம் தள்ளிப்போன தேர்தல் ஒருவழியாக இன்று வேலூரில் நேற்று நடைபெற்றது. அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதி கட்சி தலைவரான ஏ.சி சண்முகமும், திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் பொருளாளர் துரைமுருகனின் மகனான கதிர்ஆனந்தும் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இங்கு இவ்விருவருக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது.

இதனிடையே தேர்தல் நாளான நேற்று அதிமுக பிரமுகர் வேலூரில் கொலை செய்யப்பட்டார். வேலூர் மாவட்டத்திலுள்ள சேண்பாக்கத்தை சேர்ந்தவர் சேகர். இவருடைய வயது 35. இவர் மாட்டுவண்டி தொழிலாளி ஆவார். அப்பகுதி அதிமுக நிர்வாகிகளில் இவர் மிகவும் பிரபலமானவர்.

நேற்று அதிகாலை தேர்தலுக்கான ஏற்பாடுகள் செய்துவிட்டு சேண்பாக்கம் ஆர்ச் பகுதியில் அமர்ந்திருந்தார். அப்போது இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் கையில் இருந்த கத்தி மட்டும் அரிவாளால் சேகரை சரமாரியாக தாக்கியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் சேகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சேகரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சேகரை யார் கொலை செய்தார்கள்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது பற்றி காவல்துறையினர் தீவிரமாக விசாரிக்க தொடங்கினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதிமுக பிரமுகரான சேகருக்கு சொந்த வீடொன்றுள்ளது. வீட்டின் ஒரு பகுதியில் கடை வைத்து கொள்ளுமாறு தன்னுடைய நண்பரான புல்லட் மோகனிடம் கூறியுள்ளார். புல்லட் மோகன் விடுதலை சிறுத்தை கட்சியின் உறுப்பினராவார். ஆனால் சரியாக வாடகையை தராமல் சேகரை ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடும் ஆத்திரமடைந்த செய்பவர் மோகனின் கடையை காலி செய்ய கூறியுள்ளார். மோகன் சேகரை கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளார்.

இந்நிலையில் கூலிப்படையை வைத்து மோகனை கொலை செய்ய சேகர் திட்டமிட்டு கொண்டிருந்தார். இந்த திட்டத்தை அறிந்த மோகன் உஷாரானார். சேகரை கொன்றுவிட திட்டமிட்ட மோகன், நேற்று காலை சேண்பாக்கம் ஆர்ச்சில் அமர்ந்திருந்த சேகரை சரமாரியாக அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ளார். தன்னுடைய வக்கீலின் உதவியுடன் இன்று காலை ஆரணி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

இவ்விருவரும் சேண்பாக்கம் பகுதியில் மணல் கொள்ளை முதலிய குற்றங்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அந்தப்பகுதி காவல்நிலையங்களில் ஏற்கனவே புல்லட் மோகன் மீது பல்வேறு வழக்குகள் பதிவாகியுள்ளன என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

இந்த சம்பவமானது சேண்பாக்கம் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.