குரான் படிக்க வந்த 12வயது சிறுமியை கடத்தி வல்லுறவு! மதரசா ஆசிரியர் அரங்கேற்றிய பயங்கரம்!

Zoom In Zoom Out

12 வயதுச் சிறுமியை நள்ளிரவில் வாயைப் பொத்தித் தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த மதரஸா பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டை அடுத்த கலன் என்ற கிராமத்தைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமி அங்கிருந்த மதரஸா ஒன்றில் பயின்று வருகிறார். மதரஸாவில் பயிற்றுவிக்கும் ஆசிரியரான ஷாஹித் என்ற நபர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமி சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஷாகித்தை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு தான் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்ததாகவும், அப்போது தனக்கு திடீரென விழிப்பு ஏற்பட்ட நிலையில் ஷாகித் தனது  வாயை பொத்தி தன்னை தூக்கிச் செல்வது தெரிய வந்ததாகவும் சிறுமிகூறினார். இந்நிலையில் தன்னை தனியான இடத்துக்கு தூக்கிச் சென்றூ ஷாகித் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக அவர் கூறினார்.

இந்நிலையில் ஷாகித் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்போவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனிடையே ஜலன் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை வயல் வெளி ஒன்றில் 7 வயதுச் சிறுமியின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டது. அந்தச் சிறுமியின் கழுத்தில் துப்பட்டாவால் சுற்றி இருக்கப்பட்டது. தெரிய வந்தது.

சிறுமி கொலை செய்யப்படும் முன் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்தது. இந்நிலையில் சிறுமியின் தந்தை, தனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் இருவர் மீது சந்தேகம் தெரிவித்ததை அடுத்து அது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

More Recent News